அமெரிக்காவின் பிரபல நடிகையான அன்யலினா ஜொலி அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னர் இலண்டனில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தடை செய்யவதற்கு ஒரு மாநாட்டினை நடத்தியிருந்தார்.

nilmaka
இம்மாநாடானது 2009ம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பெருமளவு பெண்கள் இராணுவத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுதிய சம்பவங்களின் பின்னர் தான் இப்படியான ஒரு மாநாடு நடத்துவதற்கு காரணமாய் அமைந்தது.

இம்மாநாட்டில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோரை பார்வையிட அன்யலினா ஜொலி அவர்கள் விரும்பி இருந்தார். இதனை இலங்கையில் உள்ள சிங்கள மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் ஒரு தமிழரைக்கூட அன்யலினா ஜொலி அவர்களை சந்திக்க விடவில்லை. சிங்களவர்களை மட்டுமே கூட்டிச்சென்றார். இது புகைப்படம் மூலம் உறுதியாகின்றது. இப்படத்தில் அன்யலினா ஜொலி அவர்களுடன் சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெனான்டோ அவர்களும் இரண்டு சிங்கள பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருந்தது.

இத்தகவலை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.