சித்தாண்டி முருகன் ஆலயத்தை கைப்பற்ற சிங்கள அரசு முயற்சி

0
2619

மட்டக்களப்பு நகரத்திலிருந்து 20 கி.மீ வடக்கே அமைந்துள்ள சித்தாண்டி பகுதியில் உள்ள பண்டைய முருகன் ஆலயத்தில் தேங்காய்களைத் உடைப்பதற்கும் , கற்பூறம் எரிப்பதற்கும், பயன்படுத்தப்படும் கோவில் சூழலில் உள்ள கல்லுகளில் பௌத்த மததிற்குரிய கலை அம்சங்களை ஒத்த வடிவங்கள் காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோரி இருக்கிறது

தேங்காய்களைத் உடைப்பதற்கும் , கற்பூறம் எரிப்பதற்கும், பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கற்கள் பல தசாப்தங்களாக சித்தாண்டி முருகன் ஆலயத்தில் பாவனையில் இருப்பதாக கோவில் நிருவாகம் சொல்லுகிறது. அதே நேரத்தில் 2010 ஆம் ஆண்டில் கோயில் புதுப்பிக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களம் உரிமை கோரும் சில தூண்கள் வவுனியாவில் தயாரிக்கப்பட்டதாக கோவில் நிருவாகம் வாதிடுகிறது .ஆனால் கோவில் சூழலில் உள்ள பௌத்த மதத்திற்குரிய பொருட்கள் சிதைக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது. பல நூற்றண்டுகளுக்கு முன்னர் கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய வன்னி மன்னர்கள் சித்தாண்டி முருகன் ஆலயதத்தை நிர்மாணித்ததாக கோவில் அறங்காவலர் சபை முன்வைக்கும் வாதத்தை ஏற்க கொள்ள தொல்லியல் திணைக்களம் தயாரில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஏற்கனவே உரிமை கோரி இருக்கிறது . ஆனால் இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 600 க்கு மேற்பட்ட இடங்களை பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக கோரி ஆய்வுக்கு உட்படுத்த தொல்லியல் திணைக்களம் முயற்சித்து வருகிறது.

அந்தவகையில் அண்மையில் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை கிராமத்தில் ஒரு ஆய்வு முயற்சி நடத்தப்பட்டது . அதே போல மட்டக்களப்பு நகரில் இருந்து 35 KM தொலைவில் உள்ள 213-அடி உயரமான குசலமலையில் அமைந்துள்ள சைவ குமாரன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்புடைய பௌத்த மத குரு ஒருவர் உரிமை கோரி இருக்கிறார். இதே நேரம் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று 20 நாட்களுக்குள் சைவ குமாரன் ஆலய முன் கதவு, மற்றும் மூலஸ்தான விக்கிரம் ஆகியவற்றை இனம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர் .

நடைபெற்று வரும் சம்பவங்கள் தேர்தலுக்கு பின்னர் உக்கிரமடைவதற்க்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிகிறது .

நன்றி இனமொன்றின் குரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here