சிறிசேன அரசாங்கமானது விசாரணைகளை தவிர்த்தும் அத்துடன் பொறுப்புக் கூறவேண்டியவர்களை தன்னுடன் வைத்திருப்பது உட்பட தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளை தடுப்பதை தவிர்ப்பதன் மூலமும் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டுவருகிறது என ITJP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் இன ரீதியான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்றன இன்று வரை தொடரக்கூடியதாக அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளும் நடைமுறை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் இந்த அறிக்கையானது கவனம் செலுத்துகிறது.

 

இந்த சமர்ப்பித்தலுக்கு ஆதரவாக ITJP ஆனது அரசாங்கத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பயங்கர தாக்குதல்களை விபரிக்கும் 55 பெண்களின் வாக்குமூலங்களைக் கொண்டுள்ளது இவர்களில் 48 பேர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் , 7 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் புதிய அரசாங்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். ஜனாதிபதி சிறிசேனாவும் அவரது அரசாங்கமும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதவியேற்றதில் இருந்து சித்திரவதையை மேற்கொள்ள பாலியல் வன்முறையானது திட்டமிடப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது என ஐநா வினால் தெரிவிக்கப்பட்ட நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.

 

சிறிசேன அரசாங்கமானது விசாரணைகளை தவிர்த்தும் அத்துடன் பொறுப்புக் கூறவேண்டியவர்களை தன்னுடன் வைத்திருப்பது உட்பட தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகளை தடுப்பதை தவிர்ப்பதன் மூலமும் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டுவருகிறது. ITJP ஆனது பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைகளில் நேரடியாக தொடர்புபட்டவர்கள் அல்லது கட்டளையிடும் பொறுப்பைக் கொண்டிருந்தவர்கள் என இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளை அடையாளங்கண்டுள்ளது.

ஆயினும் அரசாங்கமானது இவர்களை நீதியின் முன் கொண்டுவருவதற்கு போதிய அரசியல் சக்தியை கொண்டிராமையால் இலங்கையில் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் பொதுவான மற்றும் ஆழ வேர்ஊன்றியதொன்றாக உள்ளது.

 

முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்.

http://www.itjpsl.com/reports/submission-to-cedaw#tamil