தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களின் “சமர்க்கள நாயகன்”  நூல்  அறிமுக விழா நேற்று  19.04.2015 ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரி, பி.எட்.அரங்கத்தில் மிகச் சிறப்பாக  நடை பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் பால்ராஜ் அவகளின் புகைப்படக் கண்காட்சியுடன் இவ் நிகழ்வு ஆரம்பமானது.

இவ் நிகழ்விற்கு புலவர் புலமைப்பித்தன் ,உணர்ச்சி பாவலர் காசியானந்தன்  , குளத்தூர் மணி , லோகு அய்யப்பன் மற்றும் டேவிட் பெரியார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இவ் விழாவினை அணைத்து மாணவர்கள் இளைஞர்கள் இயக்கங்கள் இணைந்து ஒருங்கிணைத்து இருந்தனர்.