சிறப்பு நேர்காணல் – ஈழத்திற்கான போராட்டத்தில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு

0
638

உலகெங்கும் பரந்து வாழும் பத்துக் கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்களில், தமிழகம் ஏறத்தாள ஏழு கோடி மக்களைக் கொண்டுள்ளது. சிங்கள அரசின் இனஒடுக்கு முறைகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக போராடும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமிழகத்தின் ஆதரவு மிக மிக அவசியமானது.

தனக்கு சார்பான பௌத்த நாடுகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்கள் மீது ஒரு முழு அளவின இனஅழிப்பை சிறீலங்கா அரசு முனைப்பாக முன்னெடுக்கும் போது அதனை முறியடிப்பதற்கு ஈழத்தமிழ் இனம் தனது இனத்தை ஒன்று திரட்டுவது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல மாறாக அது வரலாற்றின் அவசியமாகும்.

இந்த நிலையில் சிறீலங்கா அரசும் இந்திய அரசும் இணைந்து ஈழத்தமிழ் மக்கள் மீது திணிக்க முற்படும் 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற தீர்வு, வட மாகாணசபை தேர்தல் மற்றும் சிறீலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் போன்றவற்றில் மறைந்துள்ள தமிழ் மக்களுக்கு எதிரான சதிகளுக்கு எதிராக தமிழகத்தில் உக்கிரம் பெற்றுவரும் மாணவர் போராட்டம் தொடர்பில் இரண்டு மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் ஈழம் ஈ நியூஸ் மேற்கொண்ட நேர்காணல்கள் இங்கு பிரசுரமாகின்றன.
ananth
ஆனந்த் – பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்‏

1) ஈழத்திற்கான போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ள காரணம் என்ன?

என் உறவுகளுக்கான போராட்டத்தில் இணைத்துக்கொள்ள காரணம் ஏதும் வேண்டுமா என்று தெரியவில்லை. அது ஒரு இயல்பான மனித உணர்ச்சியின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன். என் சிறு வயதில் போர் என்றால் ஒரு விரசாகசம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த போர் எனது இனத்தின் மீது நடத்தப்பட்ட போது அதில் நான் இழந்த உறவுகளின் வலி அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்த கூடங்குளம், முல்லைப்பெரியாறு போன்ற போராட்டங்கள், நான் படித்த சில புத்தகங்கள், ஈழத்துக்காக தமிழகத்தில் இன்றுவரை உண்மையாக போராடுகின்ற சில இயக்கத்தினர் மற்றும் கட்சியினரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன். இதைவிட முக்கியமானது இனத்தின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்த போராளிகளின் தியாகம் என்று கூறுவேன்.

2) மாணவர் போராட்டம் தமிழகத்தில் எவ்விதமான மாற்றங்களை கோண்டு வந்திருக்கிறது?

ஈழத்தமிழர்களுக்கான தமிழக மாணவர்களின் போராட்டம் முதலில் அவர்களிட்த்திலே பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதுவரை பொழுதுபோக்குகளாக கழிந்த அவர்களது வாழ்க்கையில் தற்போது இனத்திற்கான போராட்டங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக பல அரசியல்வாதிகளின் நடவடிக்கையால் குழம்பியிருந்த தமிழக மக்கள் மாணவர்களின் போராட்டத்தினாலும் அதில் வைக்கப்பட்ட தனித்தமிழீழமே ஒற்றை தீர்வு என்ற கோரிக்கையாலும் பெருமளவு விழிப்புணர்வை பெற்றிருக்கின்றனர். அதே போல இந்த எழுச்சியின் ஊடாக ஈழ விடுதலை கோரிக்கையை உடைக்க நினத்த பலரது உள்ளடி வேலைகளையும் மாணவர்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர்.

3) 13 வது சட்ட திருத்தம் குறித்து உங்கள் கருத்து என்ன?

13வது சட்டத்திருத்தம் என்பது இந்தியாவும், இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம். அதில் தனி நாடாக இருந்த ஈழத்திற்கும் அதற்கும் சம்பந்தேமே இல்லை என்பதே என் வாதம்.அப்படியிருக்க அண்டை நாடு என்பதற்காக ஏகாபத்தியங்களின் ஆசியோடு அவர்கள் செய்து கொண்ட அயோக்கிய தீர்மானங்களையும், ஏமாற்று சட்ட்த்திருத்தங்களையும் திணித்தால், அதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதியா என்ன? அதனை திணித்து ஈழ விடுதலை கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்யும் இந்தியாவை தமிழக மாணவர்கள் கண்டிக்கிறோம். அதை நிறைவேற்றினால் ஏதோ இலங்கையையே தனியாக பிரிந்து விடுவதைப் போல காட்டிக்கொண்டு எதிர்த்துக் கொண்டிருக்கும் இலங்கையின் நயவஞ்சகம் என்றும் நிறைவேறாது. முதலில் ஈழத்தமிழர்களிட்த்திலே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே உறுதியான இறுதியான கோரிக்கையாக இருக்க முடியும்.

4) காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கப் போவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர்களின் இரத்தக்கறை படிந்த தங்கள் கைகளை கழுவிக்கொள்ள இலங்கைக்கும், இந்தியா, அமெரிக்கா போன்று இனப்படுகொலைக்கு துணை நின்ற ஏகாபத்தியங்களுக்கும் காமன்வெல்த் மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காமன்வெல்த்தின் அங்கமான காமன்வெல்த் வர்த்தக சபையின்(COMMONWEALTH BUSINESS COUNCIL) கூட்டம் நவம்பர் 12-14 வரை நடைபெறவிருக்கிறது. இதில் பல்லாயிரம் கோடிகளுக்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு அங்கு மரணித்த தமிழர்கள் மீது மாடமாளிகைகள் கட்டப்படவிருக்கின்றன. தமிழர்களின் நிலங்களும்இவளங்களும் ஏகாபத்தியங்களுக்கு விற்கும் ஏற்பாடு அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்கள் கூட்டாளியை உலக நாடுகள் கூட்டமைப்பின் தலைவனாக உட்கார வைத்து அழகு பார்க்க துடிக்கின்றன ஏகாபத்தியங்கள். இதற்காகவே வேகவேகமாக மாகாணத் தேர்தலை நடத்தி, 13-வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதாவது கொலைகாரனோடு கூட்டுச்சேர்ந்து தமிழர்களை வாழவைக்க நினைக்கின்றன. என்னைப்பொருத்த வரை இது தான் உண்மையான முள்ளிவாய்க்கால்.

5) தமிழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் என்பது தற்போது காமன்வெல்த் என்ற பிம்பத்தைக் காட்டி அதை மட்டும் எதிர்க்க வைக்கும் சதித்திட்டத்திற்குள் விழுந்துவிடாமல், அதற்கு முன் ஈழவிடுதலையையே முற்றிலும் நீர்த்துப்போகச்செய்யும் விதமாக இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை முறியடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம். எங்களுக்கு பக்கபலமாக ஈழத்தமிழர்களும், தமிழ் மாணவர்களும், புலம்பெயர் தமிழர்களும் மாகாணத்தேர்தலை புறக்கணிக்க தமிழீழ மக்களை தயார்ப்படுத்த வேண்டுகோள் விடுக்கின்றோம். இதன் முடிவுகளைப் பொருத்தே அடுத்த நடவடிக்கைகள் அமையும். முடிவுகளைப் பொருத்தே அடுத்த நடவடிக்கைகள் அமையும்.
shibi
சிபி – தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு‏

1)ஈழத்திற்கான போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ள காரணம் என்ன?

ஈழத்திற்க்கான போராட்டத்தை பொறுத்தவரை என்னுடைய குடும்பசுழலே அவ்வாறு இருந்தது மற்றும் 2009ம் ஆண்டு(நான் 11ம் வகுப்பு படித்துகொண்டு இருந்தேன்) தோல்வி என்பது தனிப்பட்ட முறையில் என்னையும், என்னுடைய சமூகத்தின் இருப்பை கேள்விக்கு உள்ளக்கியது.எனவே தொடர்ந்து இந்த தமிழ்தேசிய கருத்தியல்தளத்தில் செயல்பட விருபினேன். 2013யில் பாலச்சந்திரனின் புகைப்படம் எங்களின் கையறுநிலையை எங்களுக்கு புரிய வைத்தது. இந்தமுறை ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. வீதிகளில் இறங்கினோம்.

2.) மாணவர் போராட்டம் தமிழகத்தில் எவ்விதமான மாற்றங்களை கோண்டு வந்திருக்கிறது?
bala-3201
மாணவ போராட்டம் தமிழக மக்களிடன் ஈழம்தான் தீர்வு என்பதை புரியவைத்துள்ளது மற்றும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் ஒரு வித பயத்தை உருவாக்கிள்ளது. சரியா எதிரிகள் ஆனா இந்தியா, இலங்கை மற்றும் அமெரிககாவை மக்கள் புரிந்துகொண்டு உள்ளனர். இனி இந்த தமிழகத்தில் தனி ஈழத்திற்கான மிக சிறந்த தளம் அமைந்து உள்ளது.

3.) 13 வது சட்ட திருத்தம் குறித்து உங்கள் கருத்து என்ன?

முதலில் ஒரு கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 13ம் சட்ட்திருத்தம் என்பது 1987ம் ஆண்டே தமிழர்களால் புறகணிக்கப்பட்ட்து. இலங்கை அரசியல் சாசனமே தமிழர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் சட்ட்திருத்தம் என்பது எப்படி சரியாக இருக்கும். இது தொடர்ச்சியாக தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை மழுக்கடிக்கும் செயல்தான்.

4.) காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கப் போவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இன்று மேற்குலகம் இலங்கையை ஒரு சந்தையாக மட்டும்தான் பார்கிறது. அதற்க்கான சர்வதேச நகர்வுதான் இந்த காமன்வெல்த். இதன் மூலம் இலங்க்கையை ஒரு சிறந்த மூதலீடுதளமாக மாற்றப்படும் பின்பு இனப்படுகொலை மறைக்கப்படும். காமன்வெல்த் மாநாடு நடக்கும் பட்சத்தில் 2 ஆண்டுக்கு ராஜபாக்சய் அதன் தலைவராக இருப்பார் எனவே சர்வதேச விசாரனை என்பது சாத்தியம் அல்ல. இது மேற்குலக மற்றும் இந்தியாவின் கூட்டு சதிதான் இது.

5.) தமிழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

தமிழகத்தில் தனிஈழம் குறித்தும், அதற்காக நடத்தப்பட வேண்டிய பொதுவாக்கெடுபையும் தொடர்ந்து போரடுவோம். சர்வதேச தமிழ் அமைப்புகள் தனிஈழ கோரிக்கையை விடமால் தொடர்ந்து பிடித்தால் தமிழகத்திற்குள் அதர்கான தளம் இருக்கும்.

ஈழம் ஈ நியூஸ்