சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நா.க.த.அரசாங்கத்தின் அரசவையில் தீர்மானம்

0
598

Rudra6சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதிபரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைச்சபையின் அங்கத்துவ நாடுகளிடம் கோரும் தீர்மானம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

 
தீர்மானத்தின் முழுமையான வடிவம்:

 

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அல்லது அதனையொத்த சர்வதேச நீதி பரிபாலனத்திற்குப் பாரப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்குப்பரிந்துரை செய்யும்படி ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் கேட்டலும் அவ்வாறே தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் செய்யுமாறும் கேட்டல்

 

முன்மொழிவு:

 

1. செப்டம்பர் 2008இல் ஐக்கியநாடுகள் நிறுவனங்களையும். ஊழியர்களையும்.

வன்னி நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றி சாட்சியமில்லாத இனப்படுகொலையை சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டதைக் கருத்தில் கொண்டும்.

 

2. தமிழின அழிப்பின் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான அரசியல் விருப்போ அல்லது ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலை நிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது என்பதைக் கருத்தில் கொண்டும்.

 

3. தமிழின அழிப்புக்கு எதிரான நீதியை நிலை நிறுத்தக்கூடிய சாதகமான சூழல் சிறிலங்காவில் இல்லாமையையும் அனைத்துலக நிபுணர்கள் எவராலும் அந்நாட்டு அரசியற் சூழலலைத் தாண்டிப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் கருத்தில் கொண்டும்

 

4. முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் ஜெர்மனியில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைப் பொறிமுறை (Leipzig Trials), ஆர்மினிய இனப்படுகொலைக்கு எதிராக துருக்கியில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணையும் நீதியையோ அல்லது நிரந்தர சமாதானத்தையோ ஏற்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொண்டும்

 

5. ஜெர்மனியில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைப் பொறிமுறையில் (Leipzig Trials), விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜெர்மானிய இராணுவ தளபதிகளை வீரர்களாக ஜெர்மனிய மக்கள் பாராட்டியதையும் அரச சார்பற்ற நிறுவனங்களால், முள்ளிவாய்க்கால் அனர்த்தங்களின் குற்றவாளிகளாக கருதப்படும் முன்னாள் இராணுவ தளபதிகள் சரத் பொன்சேக்கா, ஜெகத் டயஸ் ஆகியோருக்கு சிரிசேனா ஆட்சி விருது வழங்கி கௌரவித்தமையையும், பதவி உயர்வு வழங்கியமையையும் கருத்தில் கொண்டும்

 

6. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 60,000இற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்ட கடைசி இரண்டு வாரங்கள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரி சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக இருந்ததையும், தன்னுடைய பதவிக்காலத்தில்தான் கூடியளவு தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர்கூறியதையும் கருத்தில் கொண்டும்

 

7. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி என்பது இவ் இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையிலான பரிகார நீதியின் பாற்பட்டதோர் அரசியல் ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பதையும் கருத்தில்கொண்டும்

 

8. பரிகார நீதியின் பாற்பட்டதோர் அரசியல் தீர்வுக்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே வழிகோலும் என்பதையும் கருத்தில்கொண்டும்

 

9. ‘சர்வதேச விசாரணை’ என தமிழ்மக்கள் கோருவது,investigation, pre-trial proceedings, trial, post-trial proceedings, penalties, appeal, review and enforcement of sentences ஆகியவற்றை உள்ளடக்கும் சர்வதேச நீதிபரிபாலனம்என்பதையும் கருத்தில் கொண்டும்

 

10. ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையும், ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரால் நடாத்தப்பட்ட விசாரணையும் தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச நீதிபரிபாலனத்தின் அம்சங்கள் என்பதை கருத்தில் கொண்டும்

 

11. தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேச விசாரணை சர்வதேச தரத்துடன் அமையும் பொறிமுறையாகாது என்பதையும் கருத்தில் கொண்டு

 

12. சர்வதேச தொழில்நுட்பனர்களுடன் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறும் விசாரணை தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சர்வதேச நீதிபரிபாலன முறையாக அமையாது என்பதையும் கருத்தில் கொண்டும்

 

13. ஐக்கியநாடுகள் சபை உருவாக்கம், அனைத்துலக மனித உரிமை பிரகடனம், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உருவாக்கம் போன்ற மனித உரிமைகள் தொடர்பாகவும் சர்வதேச நீதி தொடர்பாக எந்த ஒரு நாட்டின் இறைமையும் முழுமையானதல்ல என்ற சர்வதேச சட்ட நிலைப்பாட்டை கருத்தில் கொண்டும்

 

14. முன்னாள் யூகோஸ்லாவியா தொடர்பாக, ஐக்கியநாடுகள் மனித உரிமைக் குழு (UN Commission on Human Rights) வினால் நியமிக்கப்பட்ட ளிநஉயைட சயிpழசவநரச றின் அறிக்கையை தொடர்ந்து,

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட Commission of Experts [SC Res 780 (1992)ஸ உம் அதைத் தொடர்ந்து ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையால் அமைக்கப்பட்டு யூகோஸ்லாவிய சர்வதேச நீதிமன்றத்தையும் International Criminal Tribunal For Yugoslavia) [SC Res. 808 UNSCOR> 3175th mtg, UN Doc/803) கருத்தில் எடுத்துக் கொண்டும்

 

15. ருவாண்டா தொடர்பாக, ஐக்கியநாடுகள் மனித உரிமைக் குழு (UN Commission on Human Rights) வினால் நியமிக்கப்பட்ட ளிநஉயைட சயிpழசவநரச றின் அறிக்கையை தொடர்ந்து,

 

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டCommission of Experts [SC Res. 935 UN SCOR 49th sess, 3400th mtg, UN Doc S/Res/935 (1994 உம் அதைத் தொடர்ந்து ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையினால் அமைக்கப்பட்ட ருவாண்டா சர்வதேச நீதிமன்றத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டும் [Sec Res 955 (1994)]

 

16. ருவாண்டா சர்வதேச நீதிமன்றம், ருவாண்டாவிற்கு வெளியில் இருந்தபோதும், காணாமல்போனோர்கள் பொறுத்த விடயங்கள் தொடர்பாக பாரிய புதை குழிகள் தோண்டுவது, தடுத்துவைத்திருக்கும் இடங்களையும், ருவாண்டா அரச கோவைகளையும், ருவாண்டாவிற்கு விஜயம் செய்து பார்வையிட்டமையையும் கருத்தில் கொண்டும்

 

17. யூகோஸ்லாவியா சர்வதேச நீதிமன்ற உருவாக்கல் தொடர்பாகவும், ருவாண்டா சர்வதேச நீதிமன்ற உருவாக்கல் தொடர்பாகவும், சூடான் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தொடர்பாகவும்,

 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு தீர்மானங்கள் தொடர்பாக ரஷ்யாவிற்கு சேர்பியர்களுடன் இன ரீதியான தொடர்பு இருந்த போதிலும், சீனாவிற்கு சூடானுடன் வர்த்தக ரீதியான உறவு இருந்த போதும், ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொண்டும்

 

18. யூகோஸ்லாவியா சர்வதேச நீதிமன்றம், யூகோஸ்லாவியாவின் எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டும்

 

19. சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக்; கருத்தில் கொண்டும்

 

20. சர்வதேச விசாரணை கோரி வடமகாணசபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக்; கருத்தில் கொண்டும்

 

21. சிறீலங்காவை சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவது என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்திவரும் மில்லியன் கையெழுத்துப் போராட்டத்திற்கு இன்றுவரை 1.4 மில்லியனுக்கும் மேலான மக்கள் கையொப்பம் இட்டதையும் கருத்தில் எடுத்துக் கொண்டும்

 

22. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மில்லியன் கையெழுத்துப் போராட்டத்தில் தாயகத்திலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் கையொப்பம் இட்டதையும் கருத்தில் எடுத்துக் கொண்டும்

 

23. தற்போது மாணவர் சமூகத்தினால் தாயகத்தில் நடாத்தப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டும்

 

24. யூகோஸ்லாவியா சர்வதேச நீதிமன்றம், ருவாண்டா சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் உருவாக்கமும் உந்துசக்தியாக இருந்தவர்கள், ஐக்கியநாடுகள் சபையோ அல்லது வல்லரசுகளோ அன்றி, மாறாக உலக சிவில் சமூகமும், ஊடகங்களும் என்ற கருத்தை கருத்தில் எடுத்துக் கொண்டும்

 

25. ஒரு அரசு விசாரணையையோ குற்றவாளியை வழக்குக்கெடுப்பதையோ உண்மையாக நிறைவேற்ற விரும்பாத அல்லது இயலாதபோது சர்வதேச வழிமுறையினைக் கையிலெடுப்பதற்கு உள்நாட்டு நீதி வழிமுறை முழுமையாக நடத்தி முடித்திருக்கவேண்டியது முன் நிபந்தனையாக இருக்க வேண்டியதில்லை என்ற ரோம் சட்டத்தின் 17வது சரத்தில் காட்டப்பட்டுள்ளதும் நன்கு நிறுவப்பட்டுள்ளதுமான சட்ட நியமனத்தை கருத்தில் எடுத்துக் கொண்டும்

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கக்தின் அரசவை

 

ஐ. ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அல்லது அதனையொத்த சர்வதேச நீதி பரிபாலனத்திற்குப் பாரப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்குப்பரிந்துரை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றது,

 

ஐஐ. மற்றும் தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும் ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அல்லது அதனையொத்த சர்வதேச நீதி பரிபாலனத்திற்கு பாரப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பரிந்துரை செய்யும்படியான தீர்மானங்களை இயற்றி ஐக்கியநாடுகள் மனித உரிமைக் குழுவின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கின்றது.

 

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.