கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இன்று, யூன் 20, 2020 மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் அநியாயமாக கொல்லப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தமிழ் இளைஞன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்தது என்றும் இந்நிலையிலேயே அவர் அதிகளவு குருதிப்போக்காலும் உடன் சிகிச்சை வழங்காமலும் உயிரிழந்துள்ளார் என்றும் அறியப்படுகின்றது!

உயிரிழந்தவர் யாழ்.மிருசுவில் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

இதனால் கோபமுற்ற மக்கள் இன்று பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியதைத் தொடர்ந்து சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மக்கள் அடக்கப்பட்டனர்!

காவல்துறையினர் பார்க்க வேண்டிய வேலையை ஆயுதமேந்திய இனப்படுகொலை இராணுவம் கையாண்டு கொல்லும் முறைமை அநீதியானது! வன்மையாக கண்டித்து எதிர்ப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here