சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை : ஐ.நா மனித உரிமைச்சபை

0
668

un-sanctions_siசிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைத்தவாறு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்களுடைய அறிக்கை வெளிவந்துள்ளது.

சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில்இ தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது.

18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில்இ உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் சிறிலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில்இ சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சிலவன முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும் இ எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சிறிலங்கா உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடுஇ வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத் தொடர்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத ஆயுதக் குழுக்களுக்கு (சில துணை ஆயுதக் குழுக்களாகவும் செயற்பட்டுள்ளன) எதிரான மோசமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், அவர்களின் அரசியல் தொடர்புகள் எத்தகையதாக இருந்தாலும், சட்ட ரீதியாக விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் 9.213 இலக்க பரிந்துரை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தேசிய நடவடிக்கைத் திட்டத்தின்படி, 76 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு தீவிரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தொடர்பாக விசாரணைகள் நடப்பதாகவும், சிறிலங்கா அரசாங்கம் 2014 ஜனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் அறிக்கை அளித்தது.

துணை ஆயுதக்குழுக்கள் பெருமளவில் கலைக்கப்பட்டுள்ள போதிலும், ஆயுத மோதல்களின் போது, இடம்பெற்ற மோசமான குற்றங்கள் தொடர்பான பெருமளவு குற்றச் சாட்டுகளுடன் தொடர்புடையவர்களான, தற்போது அமைச்சர் பதவியில் உள்ள, இரண்டு மூத்த துணை ஆயுதக் குழுத் தலைவர்களான, டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராகவோ, அல்லது முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவோ, இன்று வரை எந்த நடவடிக்கையும எடுக்கப்படவில்லை.

கருணாவும் பிள்ளையானும், விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள். பின்னர் அவர்கள் பிரிந்து, கருணாகுழு என்ற பெயரில், செயற்பட்டதாகவும், இவர்கள், போர்க்குற்றங்களில் ஒன்றான சிறார்களை படையில் சேர்க்கும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்ததாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும், சிறுவர்கள், ஆயுதமோதல்கள் தொடர்பான ஐ.நா செயலரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இந்திய பொறுப்பாளர் அனந்த் பத்மநாபன் கூறுகையில்,இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

போரின்போது இரு தரப்பினரும் செய்த மனித உரிமை மீறல் பற்றிய தகவல்கள் எங்களுக்கு நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது என்றார்.இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதாவை வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள நிலைப்பாட்டுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சமர்ப்பிக்க உள்ள அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளக விசாரணைகளை கண்காணிக்கவும், சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைக்கவும் வேண்டுமென்ற நவனீதம்பிள்ளையின் கருத்து நியாயமானதே சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தயக்கம் காட்டி வருகின்றமையினால், சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது