சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு உட்பட 6 இடங்களில் ஏற்பட்ட பாரிய குண்டு வெடிப்புக்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொழும்பில் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம் மற்றும் நீர்கொழும்பு புனித செபஸ்ரியர் ஆலயம் ஆகிய இடங்களிலேயே குணடுகள் வெடித்துள்ளன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனிடையே 11 வெளிநாட்டவர்கள் உட்பட 186 பேர் கொல்லப்பட்டதாகவும், 469 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

புனித தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது குண்டுகள் வெடித்ததில் பிரார்த்தனைக்குச் சென்ற பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

 

இவைதவிர கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகளான ஷங்கரிலா, சினமன்ட் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஆகிய இடங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கிறிஸ்த்தவர்களின் தேவாலயங்களும், கிறிஸ்த்தவர்கள் தங்கியிருந்த விடுதிகளும் குறிவைக்கப்பட்டுள்ளதால் இது கிறிஸ்த்தவர்களுக்கும் மேற்குலகத்திற்கும் எதிரான பௌத்த சிங்கள தீவிரவாதிகளின் செயல் என படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

சிறீலங்காவில் மீண்டும் ஒரு ஆயுதப்போரை முன்னெடுப்பதற்கு பிராந்திய வல்லரசுகள் முயன்று வருகின்றன. கடந்த வருடம் வவுணதீவுத் தாக்குதலை ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் இந்தியா மேற்கொண்டிருந்த நிலையில் தற்போதைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.