1986 ஆனி மாதம் 6 ஆம் நாள் வங்காலை கத்தோலிக்க ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை.

 

1987 வைகாசி 29 ஆம் நாள் அல்வாய் இந்து ஆலயம் மீதான சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்.

 

1992 வைகாசி 30 ஆம் நாள் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் மீதான எறிகணைத் தாக்குதல்.

 

1993 புரட்டாசி 29 ஆம் நாள் கொக்குவில் ஆலயம் மீதான குண்டுத்தாக்குதலும் படுகொலைகளும்
1993 கார்த்திகை 13 ஆம் நாள் குருநகர் கத்தோலிக்க தேவாலையம் மீதான குண்டுத்தாக்குதல்.

 

1995 ஆடி 09 ஆம் நாள் நவாலி சென் பீற்றேஸ் தேவாலையம் மீதான சிறீலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதல் சிறீலங்கா படை நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை.

 

1999 கார்த்திகை 20 ஆம் நாள் புனித மடு தேவாலையம் மீதான சிறீலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதல் சிறீலங்கா படை நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த பெருமளவான அப்பாவி பொதுமக்கள் படுகொலை.

 

2006 வைகாசி 06 ஆம் நாள் முல்லைத்தீவு ஆலயம் மீதான குண்டுத்தாக்குதலும் படுகொலைகளும்.

 

2006 ஆனி 17 ஆம் நாள் பேசலை தேவாலயத்தில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலை.

 

2015 தை மாதத்தில் இருந்து 2017 ஆனி மாதம் வரையிலும் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 226 வன்முறைகள். இவை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் மதத்தவர்களால் மேற்காள்ளப்பட்டவை.

 

2018 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 86 வன்முறைகள். இவை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் மதத்தவர்களால் மேற்காள்ளப்பட்டவை.

 

2019 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 105 வன்முறைகள். இவை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் மதத்தவர்களால் மேற்காள்ளப்பட்டவை.

 

2019 சித்திரை 21 ஆம் நாள் புனித ஞாயிறு படுகொலை 310 பேர் மரணம்இ 600 இற்கு மேற்பட்டவர்கள் காயம். இது சிங்கள அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ஆசி பெற்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.

 

சிங்கள அரசின் ஆசிர்வாதம் பெற்ற ஹிஸ்ப்புல்லா சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அமைத்த மூஸ்லீம் தீவிரவாத அமைப்பு 23 தமிழ் கிராமங்களை அழித்து பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

செய்தித் தொகுப்பு ஈழம் ஈ நியூஸ்.