வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பெருமளவான நிதியையும், சிறீலங்கா அரசு ஒதுக்கும் பெருமளவான நிதியையும் வடகிக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கல் மற்றும் நில ஆக்கிரமிப்புக்களுக்காகவே சிறீலங்கா அரசு பயன்படுத்தி வருகின்றது.

 
பௌத்த ஆலயங்களை அமைத்தல் இந்து ஆலயங்களின் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைபோடுதல், இந்து ஆலயங்களின் அபிவிருத்திகளுக்கு தடைகளை ஏற்படுத்துதல், சிங்கள குடியேற்றங்களை நிறுவுதல் மற்றும் இராணுவ வலையங்கள் என்ற போர்வையில் பெருமளவான தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்துதல் என்ற சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கையின் உச்சமாக மகாவலி நீர்ப்பாசண அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பெருமாவான நிலங்களை அபகரித்து அதில் சிங்கள மக்களை குடியேற்றி தமிழ் மக்களின் தனித்தன்மையையும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரலையும் ஒடுக்க சிங்கள அரசு திட்டத்தை தீட்டியுள்ளது.

 
சிங்கள அரசின் இந்த திட்டத்தை முறியடிப்பதற்கான முதல் முயற்சியாக தமிழ் இனம் ஒன்று திரண்டு இன்று (28) மிகப்பெரும் பேரணி ஒன்றை வடக்கில் நடத்தியுள்ளது.

 
அனைத்துலக சமூகத்தினாலும், இந்திய அரசினாலும் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்ட தமிழினம் தனது தலைவிதியை தானே எழுதும் முயற்சி ஒன்றை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

 
சிறீலங்கா அரசின் நில ஆக்கிரமிப்பின் தாக்கம் என்ன அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வருகின்றது என்பதை ஈழம் ஈ நியூஸ் பல வருடங்களுக்கு முன்னரே தகுந்த ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் தொடர் பத்திகளாக வெளியிட்டிருந்தது.
தற்போதைய சூழ்நிலை கருதி அதன் இணைப்புக்களை நாம் இங்கு மீண்டும் தருகின்றோம்.

 

“தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் : இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு”

 

பகுதி 01: http://www.eelamenews.com/?p=115421

பகுதி 02: http://www.eelamenews.com/?p=116010

பகுதி 03: http://www.eelamenews.com/?p=116225

பகுதி 04: http://www.eelamenews.com/?p=117386