இன்று (16) சீனா – இந்திய எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் இடம்பெற்ற மோல்களில் ஒரு அதிகாரியும் இரண்டு சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இரு தரப்புக்களும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். நிலமையை தணிக்கும் பொருட்டு இரு நாட்டு படை அதிகாரிகளும் சந்தித்து பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது இழப்புக்கள் தொடர்பில் சீனா எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும் இந்தியப் படையினர் எல்லையை கடந்து வந்ததாகவும், அதனால் தாம் தாக்குதல் நடத்தியதாகவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (15) இந்தியப் படையினர் இரு தடவைகள் அத்துமீறல்களில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தியா இதனை நிறுத்த வேண்டும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தினரை சீனா படையினர் அடித்து கொலைசெய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1962 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் போது இந்தியா படுதோல்வி அடைந்ததுடன், இந்தியாவின் 14,700 சதுரமைல் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தும் வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here