எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்போவதாகவும், ஆனால் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது 5 நாட்கள் சிறீலங்காவில் தங்கவேண்டும் எனவும் சிறீலங்கா சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது நேற்று (6) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஏல்லா நாடுகளிலும் இருந்து பயணிகளை அனுமதிக்க திர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச விமான நிலையம் மற்றும் மாத்தளை விமான நிலையம் ஆகியன திறக்கப்படவுள்ளன.

பயணிகள் 72 மணிநேரத்திற்கு முன்னர் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதுடன், அவர்கள் நோய் அற்றவர்கள் என உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here