suhsma_anpumani_meet1இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இன்று (16.07.2014) சந்தித்து ‘இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

அவருடன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், வழக்கறிஞர் பாலு, மருத்துவர் செந்தில் ஆகியோரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்தனர். அவர்கள் “நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் கூட்டமைப்பின்” (Civil Society Coalition for Justice and Peace) சார்பில் இலங்கை தொடர்பில் இந்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏன் தேவை என்பதை விளக்கிக் கூறினர்.

(மருத்துவர் அன்புமணி இராமதாசு, வழக்கறிஞர் பாலு, மருத்துவர் செந்தில் ஆகியோர் ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டங்களில் பசுமைத் தாயகம் சார்பில் நேரடியாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.