நிகழ்வு: செஞ்சோலை – பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்

0
410

se-padu-fr-2ஆகஸ்ட் 14, 2013, வள்ளிபுனம் செஞ்சோலை அநாதை சிறார் இல்லம் மீது திட்டமிட்டு குண்டு மழை வீசி அநியாயமாக இளம் சிறுமிகள் தமிழர் என்பதற்காக கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட கொடிய வலி சுமந்த நாள்.

7 ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத கொடும் வலி சுமந்து நிற்கும் மாறாச் சோகத்தின் அழியாச் சுவடு எம் உள்ளங்களில் இன்றும் ஆழ பதிந்து நினைவோரம் நெருப்பாக எரிகின்ற கொடிய நாள்.

இலங்கையின் வான்படை திட்டமிட்டு இலக்கு வைத்து தாக்கிய படுகொலை சம்பவம் இது. மாபெரும் கொடிய இனப்படுகொலையான இந்த கொடிய நிகழ்வு 14.08.2006 அன்று வள்ளி புனம் செஞ்சோலை வளாகத்தில் இனவெறிச் சிங்கள அரசின் இரும்புப் பறவைகளின் குண்டுத்தாக்குதலில் வேண்டுமென்றே கட்டவிழ்க்கப்பட்ட்ட கோர இன அழிப்பு நடவடிக்கையின் வலிமையான ஆவணம்.

இருந்தும் இன்னும் இலங்கையில் நடந்தது யுத்தக் குற்றம் என துணிந்து சொல்ல ஒரு வக்கில்லாமல் ஆவணம் தேடி அலைகிறது உலகம். உலகின் தொடர்ந்த அமைதியால் அனுமதிக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் இவை.

இவை மறக்கப் பட வேண்டிய காலங்கள் இல்லை. ஆறாத்துயராக எமக்குள் படிந்து கிடக்கும் அந்த வலிகளை மீட்டெடுத்து இனவெறியோடு எம் இனத்தை படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச கூண்டில் ஏற்றும் வரை ஓயமாட்டோம் தமிழர்கள் நாம் கூடி சபதம் எடுத்துக் கொள்வோம்! எம் கண்மணிகள் ஆன்மா மீது ஓயமாட்டோம் நீதியை மீட்டு அநீதியை அழிக்கும் வரை என சத்தியம் செய்வோம்!.

எமையெல்லாம் விட்டுப்பிரிந்த மாணவச் செல்வங்களின் 7ம் ஆண்டு நினைவாக நாம் வெறுமனே கண்ணீர் சிந்தி மறந்து போகாமல் எழுச்சி தீ மூட்டி நீதியை வென்றெடுக்க நெருப்பாக கனன்று எழுவோம்!

சுவிசில் நடைபெற்ற செஞ்சோலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில், உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
sensolai2004இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்ததும், தமிழர்களின் நெடிய வரலாற்றுப் பயணத்தில் மறக்கமுடியாத ஆறாவடுவாக மாறியதுமான வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள் 14.08.2013 புதன்கிழமை சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில்; உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தமிழர் இல்லம் நிரம்பிய மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் செஞ்சோலை,

காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணியாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய முதலாவது ஈகச்சுடரினைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கான ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் செஞ்சோலை சிறார்களின் நினைவு சுமந்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளினது நினைவுகள் சுமந்த கவிதைகளும், உரைகளும் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

பாரிசில் 7 ஆண்டு செஞ்சோலை படுகொலை – சிறார்கள் -பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை – திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
se-padu-fr-1
அதை பார்த்து கொண்டிருந்தவர்கள், அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு.

2006 வுடன் படுகொலைகள் நிற்காமல், முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் இனப்படுகொலை, நடக்கும் நாட்டில் பொதுநலவாயா நாடுகளின் மகாநாட்டை நடத்தி சிறி லங்கா என்ற நாட்டிக்கு அங்கீகாரம் கொடுக்க நினைக்கிறது சர்வதேசம்.

இந்த நாளில் சர்வதேச நாடுகளின் நிலைபாட்டை கண்டித்து பாரிசில் செஞ்சோலை படுகொலையின் நினைவுகள், செங்கொடியின் தியாகாங்கள் நினைவு கூறப்பட்டு நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, தென் ஆபிரிக்கா நாட்டின் தூதராலயாத்த்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
se-padu-fr-8
பிரான்சு தமிழீழ மகளீர் அமைப்பு ஒழுங்கு செய்த இந்த ஒன்று கூடலில் பிரான்சு இளையோர் அபைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பல அரசியல் வேலை திட்டங்களை முன்னெடுத்த்து இருந்தனர்.

எமது போராட்டம் அடுத்த வாரம் நியூ ஜிலாலாந்து தூதரகம் அருகில் மெட்ரோ Victor Hugo (Ligne 2) அருகில் நடைபெறும். தொடர்ச்சியான எமது போராட்டங்கள் தான் நீதியான விடுதலையை தேடித்தரும்.

– பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை –

யேர்மன் – செஞ்சோலை படுகொலை வணக்க நிகழ்வு

செஞ்சோலை வளாகத்தில் சிங்கள பேரினவாதம் நடாத்திய படுகொலையின் 7ம் ஆண்டு நினைவாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் லண்டவ் (Landau) நகரத்தில் 14.08.2013 அன்று வேற்றின மக்களையும் யேர்மன் மக்களையும் ஈர்க்கும் வகையில் துண்டுபிரசுர பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை உள்ளடக்கிய துண்டுபிரசுரங்கள் தமிழ் இளையோர்களால் வேற்றின மக்களுக்கும் யேர்மன் மக்களுக்கும் வழங்கப்பட்டு செஞ்சோலை வளாகப் படுகொலையை பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.