எங்களுக்கு என்று ஒரு நாடு, எங்களுக்கு என்று ஒரு மொழி, எங்களுக்கு என்று ஒரு சுதந்திரம். இது வரும் வரைக்கும் நாம் போராடுவோம் ஓயாது போராடிக் கொண்டு இருப்போம். எமது இறைமையுள்ள சுதந்திர தமிழீழத் தனியரசிற்கான கட்டுமானங்களை எப்படி எம் தேசியத் தலைவர் கட்டியெலுப்பினாரோ அதேபோல புலத்தில் வாழும் இளையவர்களும் தலைவன் வழி நின்று மலரும் சுதந்திர தமிழீழத்துக்கான கட்டுமானங்களை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன் தோற்றப்பாடே தமிழீழ உதைபந்தாட்ட அணி.

TE-Football-1
ஸ்வீடனில் நடக்க இருக்கும் போட்டியில் எமது அணி வெற்றி வாகை சூடி எமது மண்ணின் பெருமையையும், மக்களின் பெருமையையும் எங்களது தலைவனின் பெருமையையும் உலகிற்கு பறைசாத்திட பிரித்தானிய இளையோர்கள் சார்பில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் வாழ்த்துக்கள் என்றென்றும் இருக்கும்.

TE-football-3
சென்று வாருங்கள், வென்று வாருங்கள், வெற்றி வாகை சூடி வாருங்கள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.