jalli9காது வழியா மூளை வழியுறதா சொல்லிட்டு திரியுற திராவிட சாதி ஒழிப்பு போராளிகள் சிலபேர் வட இந்திய – பீட்டா கூட்டு சதியினால் ஜல்லிக்கட்டுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் தடையைக் கண்டு மகிழ்வதை காண்கிறேன்.

 

இழவு வீட்டில் வந்து பல்லைக்காட்டும் கீழ்த்தரமானவர்களாகவே அவர்களை பார்க்கிறேன்.
ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி திங்குறது உங்க சுதந்திரம்னா.. மாடுடன் விளையாடுவது அவர்களின் சுதந்திரம் என்ற குறைந்த பட்ச அறிவு வேணாமா.

 

நடிகைகளை கூட்டி வந்து அம்மணமாக நிற்க வைத்து அதை படம் பிடித்து விளம்பம்பரம் தேடிக்கொள்ளும் ஒரு அமைப்பு பீட்டா. பிட்டு துணியை விலக்கவும் காசு எனும் சூழலில் அம்மணமாக நிற்க நடிகைகளுக்கு எவ்வளவு அள்ளி விட்டிருப்பார்கள். அதற்கான பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்ற பின்புலம் என்னவென்று அறிய வேண்டுமா இல்லையா.

 

மாடு கூட விளையாடுறது காட்டுமிராண்டிதனம்னா காட்டுல இருக்க வேண்டிய யானையை ஏண்டா கோவில்ல நிற்க வச்சுருக்கீங்க.. ஏன் எந்த பீட்டாக்காரனும் காரியும் கேட்கலனு யோசிக்கணுமா இல்லையா.

 

ஜல்லிக்கட்டில் சில பாதக அம்சங்கள் விமர்சனங்கள் இருக்கின்றனதான். அதை களைய முயற்சிக்க வேண்டுமேயொழிய அந்த மக்களின் உணர்வோடு களந்துவிட்ட ஒரு பண்பாட்டு திருவிழாவை தடை செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

 

இந்த தடையை நீங்கள் ஆதரிப்பீர்களானால் அடுத்து காளைகளை கொடுமைப்படுத்தி ஏர் உழ செய்றாங்க பாருங்க என்பார்கள்.. அப்போதும் பல்லைக்காட்டுங்கள்.

 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் சாதி இழிவு நீங்கி விட்டார்களா.. சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதா.. அல்லது ஜல்லிக்கட்டில் மட்டும்தான் சாதி இருக்கிறதா.. என்ன.

 

மாடு பிடி வீரர்கள் சாதி பாகுபாடு இல்லாமல் மாட்டை பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள் அது நியாயம்.

 

ஆனால் அதை தடை செய்தால் தான் சாதி ஒழியும் என்று உளறாதீர்கள். அப்படி ஜல்லிக்கட்டை தடை செய்ததன் மூலம் சாதி ஒழிப்பு நடந்திருக்கிறதாக நம்பும் திராவிட கம்பெனிகளும் அவர்களின் பக்கவாத்தியங்களும் உடனே கடையை மூடிட்டு போய் பீட்டால சேர்ந்து உங்க புரட்சியை நடத்துங்க…
ஏன்னா.. பெரியாராலும், பெரியார் பெயரை சொல்லி வந்தவர்களாலும் ஒழிக்க முடியாததை பீட்டாப்பயலுக செஞ்சுட்டாங்கள்ல. அப்படிதானே நீங்க நம்புறீங்க.

 

இந்த தடைக்கு பின்னிருக்கும் அரசியல் என்ன என்பதை பார்க்காமல் அபத்தமாக நீங்கள் அல்ப சந்தோசப் படுவீர்களெனில்..

 

நன்றாக சிரித்துக்கொள்ளுங்கள்..

 

ஏனெனில் அடுத்து அவர்களின் குறி உங்கள் சாப்பாட்டு தட்டுதான்.

 

-கார்ட்டூனிஸ்ட் பாலா
14-1-16