ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம் – புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்

0
680

geneva3ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

நேற்று காலை ஆரம்பமான கூட்டத்தொடரின் போது புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் தமது போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன் உள்ள உடைந்த கதிரையின் சுற்றாடலில் இனவழிப்புத் தொடர்பான புகைப்பட சாட்சியங்களை பொது மக்களின் பார்வைக்கும் சர்வதேசத்தினிடம் நீதிகேட்டும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தினமும் காலை 7:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை இனவழிப்புத் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

கடந்த 5ம் நாள் அதே முன்றலில் தன்னை அழித்து சர்வதேசத்திடம் நீதிகேட்டு வீரச்சாவடைந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் படம் அவ்விடத்தில் வைக்கப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன்இன்னுயிரை ஈய்ந்தார்.
geneva2
அவர் வீரச்சாவடைந்த பின்னர் பலதரப்பட்ட செய்திகளும் வந்த நிலையில், எவற்றையும் உறுதி செய்ய எம்மால் முடியவில்லை. தற்போது அவர் தொடர்பான ஆவணம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அவர் தமது இறுதிக்கணத்திலும் எவ்வித சஞ்சலங்களும் இன்றி நிதானமாக உலகத்தழிழ் மக்களுக்கு காத்திரமான செய்தி ஒன்றை விடுத்துச் சென்றுள்ளார்.

தீயினுள் சங்கமம் ஆவதற்கு முன்னர், தன்னுடைய கைத்தொலைபேசியில் தன்னுடைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:
geneva4
அனைத்து தமிழ் மக்களுக்கும் நான் ரட்ணசிங்கம் செந்தில்குமரனாகிய நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்று சொல்லுவதென்றால், எல்லா மக்களும் ஒன்றிணைந்து எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும். எதிர்வரும் 16ம் திகதி ஒரு ஒன்றுகூடல் இருக்கின்றது. அதில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். அதைவிட 30ம் திகதி மாபெரும் ஒன்றுகூடல் இருக்கின்றது. உங்கள் ஆதரைவ வழங்கி உங்களுக்கு உரித்த உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். எமக்கென்ற தனிநாடு கிடைக்க வேண்டும். இதற்காகவேண்டி நான் என்னுயிரை நீக்கின்றேன்.

எனது பிள்ளைகளை நீங்களே உங்கள் பிள்ளைபோல் பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி
வணக்கம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்