ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைச் சபையின் 28வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் மார்ச் மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வின்போது 18.3.2015 புதன்கிழமை மாலை 17.00 மணியிலிருந்து 18.30 மணிவரை உபமாநாடு நடைபெற்றது.இந்த உப மாநாட்டில் பன்னாட்டு பிரதிநிதிகள்,மனிதஉரிமை செயற்பாட்‌டாளர்கள் கலந்து கொண்ட வேளையில் தாயகத்திலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம்,வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சஜீவன்,தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த தமிழின உணர்வாளர் செல்வி உமாசங்கரி நெடுமாறன்,ஊடகவியலாளர் இளமாறன்(கனடா) ஆகிய பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா ஆட்சி மாற்றத்தினால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகள் பற்றியும் ,மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் உரை நிகழ்த்தியிருந்தனர்.

https://youtu.be/kcbYcUPFt_o

https://youtu.be/1XXrv2-W2NI

https://youtu.be/__k_gBccBLU

https://youtu.be/R1N-vyOh1jg