28ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மார்ச் திங்கள் 16ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். புலம்பெயர் நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப்பேரணியை நடாத்திக் கொட்டொலிகளை எழுப்பவுள்ளனர். பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பமாகிப் பல ஐரோப்பிய நாடுகளூடாக மேற்கொள்ளப்படும் விடுதலைச்சுடர் பயணமும் அந்நாளில் ஜெனீவாவில் நிறைவடையவுள்ளது.

 

ஜெனீவாவில் நடைபெற உள்ள இம்மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள மக்களுக்காக பிரித்தானியாவிலிருந்து பேரூந்துகள் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 15ஆம் நாள் மாலை 5 மணிக்கு வடமேற்கு லண்டன் 89, Malvern Avenue, South Harrow , HA2 9ER என்னுமிடத்திலிருந்தும் அதேநாள் மாலை 6 மணிக்கு தென்மேற்கு லண்டன் 4, streatham Road , Mitcham , CR4 2DA ( Halfords முன்பாக) என்னுமிடத்திலிருந்தும் பேரூந்துகள் புறப்படவுள்ளன.

 

சிறீலங்கா அரசபயங்கரவாத சிங்களப் பேரினவாதிகளால் தமிழினம் திட்டமிடப்பட்ட வகையில் தொடர்ந்து கருவறுக்கப்படுகிறது என்பதை உலகுக்கு உணர்த்த தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தாயகத்திலும் புகலிட நாடுகளிலும் நீதிக்கும் உரிமைக்குமாக எழுகின்ற தமிழ் மக்களின் குரல்கள் மேன்மேலும் வலுவடைந்து செல்கின்றன. தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாகத் தடம் பதித்து நடந்து அனைத்துலக நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய காலமிது. போராட்ட வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இலக்கினை நோக்கிய இலட்சியப் பயணம் உறுதியுடன் முன்னெடுக்கப்படும் என்ற செய்தி உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் வகையில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர்களாக தமிழர்கள் செயற்பட வேண்டிய காலகட்டமிது.

 

எனவே மார்ச் திங்கள் 16ஆம் நாள் திங்கட்கிழமை அனைத்துத் தமிழர்களும் ஜெனீவாவில் அணிதிரள வேண்டும். அனைவரும் வாருங்கள்.

 

பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

 

தொடர்புகளுக்கு
வடமேற்கு லண்டன் 07932231207
தென்மேற்கு லண்டன் 02033719313

 

https://www.youtube.com/watch?v=DY-Iw_0-GNk