sister-missing2014 மார்ச் 13 ம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரியில் பாலேந்திரா nஐயக்குமாரி என்ற விதவைப்பெண் மற்றும் விபூசிகா என்ற 13 வயதான மகளைக் கைதுசெய்தமைக்கு எதிராக தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி பலமான எதிர்ப்புடன் சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரிநிற்கின்றது.

வட மாகாணத்தில் காணாமல் போனோரின் குடும்பத்தார் நடாத்தும் கவனஈர்ப்பு போராட்டங்கள் அனைத்திலும் nஐயக்குமாரி பங்கேற்பது உண்டு. இதற்கான காரணம் தன்னுடைய மூன்று ஆண்மக்களில் இருவர் யுத்தத்தில் மரணமடைந்து போனதன் பின்னர் யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதன்பின் 2009 மே மாதத்தில் எஞ்சியிருந்த தன்னுடைய மூன்றாவது மகனையும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தும் அதன் பின்னர் அவருடைய மகனைப்பற்றிய தகவலும் nஐயக்குமாரிக்கு இன்றுவரையிலும் கிடைக்கவில்லை. nஐயக்குமாரிக்கு எஞ்சியிருந்த ஓரே பிள்ளை விதுசா மட்டும்தான். இராணுவத்தினர் அக்குடும்பத்தையே அழிக்கும் நோக்கில் தாயையும் மகளையும் கைதுசெய்துதுள்ளார்கள்.

சிறீலங்கா இனவெறி அரச பயங்கரவாதம் எம் இனத்தின்மீது பாரிய இன அழிப்பைச் செய்தது மட்டுமன்றி எம்மினப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள், கொலைகள், விதவைக் கோலங்கள், உறவுகளைத் தேடியலையும் அவலங்கள் போன்ற மானுடமே வெட்கித் தலைகுனியக் கூடிய காட்டுமிராண்டித்தனங்களை இன்றுவரை செய்து வருகின்றது.

இப்போதும் கூட சிறிலங்கா அரசானது ஒருதாயும் சேயும் விடயத்தில் நடந்துகொண்டுள்ள தன்மை மிகவும் கொடுரமாகவுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை தாம் சிறிதளவேணும் பொருட்படுத்தமாட்டோம் என்பதனை உலகுக்கு மிகத்தெளிவாக சிறிலங்காஇனவாத அரசு கூறியுள்ளது.

போரின் பின்பான காலங்களில் தமிழீழத்தில் சிறீலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்க இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் மக்களால் முடிவதில்லை. இவற்றிற்கெதிராக குரல்கொடுக்க முனைந்த வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி எழிலன்கூட மிரட்டப்பட்டுள்ளார். இருந்தாலும் துணிவோடு பெண்களுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிவரும் அனந்தி போன்றவர்களுக்கு ஆதரவளிப்பதோடு தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கான உதவிகளை முன்னெடுப்பதும் எமது தலையாய கடமையாக உள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது ஒருவித மென்போக்கே காட்டப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் எத்தகைய அறிவுறுத்தல்களையும் செவிசாய்க்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பது புரிந்தபோதும் கூட ஐநா சபை காத்திரமான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இன்றய சூழலில் தமிழ்மக்களாகிய எமக்கு இருக்கக்கூடிய ஒரேவழி ஒன்றுபட்டு சர்வதேசத்தை நோக்கி தமிழின அழிப்புக்கெதிரான நீதிகோருதல் ஒன்றேயாகும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்ப்பெண்கள் விழிப்புணர்வும்,அரசியல் அறிவும் கொண்டவர்களாக மாறவேண்டிய சூழல் அவசியமானதாகிறது. ஆகவே பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழின அழிப்புக்கு காரணமான சிறீலங்கா அரசுமீது ஒர் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தி தண்டணை வழங்கக்கோரியும் சர்வதேச சமுகத்திடம் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு வேண்டிநிற்கின்றது.

அன்பான உறவுகளே! தமிழ்ப் பெண்களாகிய நாம் உலகப் பெண்ணினத்துக்கு ஓர் அரிய செய்தியை கூறுவோம். தமிழீழப்பெண்கள் எத்தகைய அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் என்பதையும், ஓர் அறிவார்ந்த சமூகம் என்பதையும், உலகில் எங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றாலும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் என்பதையும் உணர்த்துவோம். தமிழ்ப் பெண்களாகிய எமது நிறைவான உரிமைகள் தமிழீழ விடுதலையுடன் கூடியாகவே இருக்கின்றது என்ற உன்மையை உலகிற்கும், மானுடத்தை நேசிக்கும் அமைப்புகளுக்கும் புரியவைப்போம். ஜெயக்குமாரி விபூசிகாவின் மற்றும் கைதுசெய்யப்பட்ட ஏனைய உறவுகளின் விடுதலையை கோரிநிற்போம்

தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.