தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா சிறை­வாசம் சென்று விட்டார். இனி எமக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை எல்லாம் முடிந்­து­விட்­டது என்று அர­சாங்கம் குதூ­க­லிக்­கு­மாயின் அது அர­சாங்­கத்தின் தப்­புக்­க­ணக்­காகும். இனிதான் அர­சாங்­கத்­திற்கு பல­மான பிரச்­சி­னைகள் காத்­தி­ருக்­கின்­றன என்று நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

vikramabhahu
இலங்­கையில் இலட்­சக்­க­ணக்­கான அப்­பாவி தமி­ழர்­களை கொன்று குவித்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஒரு போர்க்­குற்­ற­வாளி என்றும் அவரை சர்­வ­தேச நீதி­மன்றில் நிறுத்த வேண்­டு­மென்றும் முன்னாள் தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா உரக்க குரல் கொடுத்தார்.

இன்று அந்த குரல் முடங்கி விட்­டது. இனி எம்மை யாரும் அச்­சு­றுத்த முடி­யாது என்று அர­சாங்கம் நினைக்­கி­றது. ஆனால், ஜெய­ல­லி­தாவின் வெற்­றி­டத்தை எதிர்­கா­லத்தில் தமிழ்­பற்று அதிகம் உள்ள சீமான் போன்ற யாரேனும் நிரப்­பினால் அர­சாங்­கத்தின் கதி என்­ன­வாகும்? நிச்­ச­ய­மாக தப்­பிக்­கவே முடி­யாமல் மாட்­டிக்­கொள்ள நேரும் என்று அவர் மேலும் தெரி­வித்தார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

ஜெய­ல­லிதாவின் குரல் நின்று விட்­டது. தமி­ழகம் இனி மௌன­மாகி விடும் என்று அர­சாங்கம் தப்பு கணக்கு போடு­கி­றது.

உண்­மையில் ஜெய­ல­லிதா ஒரு மித­வாதி அவரை விட அதி­க­மாக தமிழ் பற்று தீவிரம் கொண்­ட­வர்கள் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு உரக்க குரல் கொடுத்து வரு­கின்­றனர். அவர்­களின் குரலை அர­சாங்­கத்­தினால் அடக்க முடி­யாது. எதிர்­கா­லத்தில் தமிழ் தீவிர பற்­றாளர் ஒருவர் ஆட்­சிக்கு வந்தால் அர­சாங்­கத்தின் நிலை மோச­மா­ன­தாகி விடும் ஜெய­ல­லிதா மீண்டும் வந்­தாலும் அர­சாங்­கத்­திற்கு இந்த நிலை நிச்­சயம் உரு­வாகும். ஆயினும் அர­சாங்கம் ஜெய­ல­லி­தாவை ஒரு விட­யத்தில் உதா­ர­ணப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் தவறு செய்­தாலும் மக்­க­ளுக்கும் ஏழை­க­ளுக்கும் அப்பணத்தில் நிறைய நன்­மை­களை உத­வி­களை செய்­துள்ளார். அதனால் தான் அவ­ருக்கு ஆத­ர­வாக ஆர்ப்­பாட்­டங்­களும் தீக்­கு­ளிப்­பு­களும் இடம்­பெ­று­கின்­றன. இதே நிலை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்டால் முழு குடும்­ப­முமே கம்­பி­களை எண்ண நேரிடும்.

இன்று அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும் தனக்கு ஆத­ர­வாக உள்­ளன என்று ஜனா­தி­பதி மஹிந்த கூறு­வது முற்­றிலும் பொய்­யான கருத்து. உண்மை வேறு வித­மாக உள்­ளது என்று எதிர்­கா­லத்தில் புரியும். அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்­வு­களை இந்த நாட்டில் பெற்றுக் கொடுத்தால் மாத்­தி­ரமே அதனால் தப்­பிக்க முடியும்.
பொது­ப­ல­சே­னாவை உரு­வாக்­கி­யது யார்?

வி.ஐ.பி. சலு­கை­யுடன் முஸ்­லிம்­களை அழித்­தொ­ழிப்பேன் என்று சபதம் போட்­டுள்ள அசின் விராது தேரரை இந்த நாட்­டுக்குள் நுழைய விட்­டது யார்? எல்­லாமே அரசாங்கத்தின் வேலைத் திட்டமே. சிங்­கள முஸ்லிம் பிரச்­சி­னை­களை உரு­வாக்கி அர­சி­யலில் வெற்றி பெற அரசு வகுத்த வியூ­கமே இவை. முஸ்­லிம்­களின் தொகை அதி­க­ரித்து விட்­டது என்று கூறு­கின்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட பொது­ப­ல­சே­னா­வினர் முடிந்தால் தங்கள் இனத்­தையும் பெருக்கிக் கொள்ள வேண்­டி­யது தானே. யாரும் இதற்கு தடை விதிக்க மாட்­டார்கள்.

ஆனால், இன்­னொரு இனத்தை அழிக்க நினைப்­பது மாபெரும் தவறாகும். இன, மத, ஜாதி­வா­தத்­தினை ஏற்­ப­டுத்தி அர­சியல் நடத்தலாம் என்று அர­சாங்கம் நினைப்­பது வெட்­கப்­பட வேண்­டிய விடயம். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சமா­தான நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்­கமும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் இணைந்து குழப்­பி­ய­தோடு முன்னாள் நீதி­ய­ரசர் சரத் என் சில்வா சுனாமி மீள் கட்­ட­மைப்பு தொடர்பில் வழங்­கிய பாத­க­மான தீர்ப்பே இந்த நாட்டில் இன அழிப்­புக்கு வித்­திட்­டது என்­ப­தனை நாம் மறந்­து­விடக் கூடாது.

ரணில், – பிர­பா­கரன் ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சமா­தான நட­வ­டிக்­கை­களை குழப்­பாமல் இருந்­தி­ருந் தால் இந்த நாட்டில் இலட்­சக்­க­ணக்­கான உயிர்கள் அழிந்­தி­ருக்­காது. இனியும் அர­சியல் இலா­பத்­திற்­காக அர­சாங்கம் சிறு­பான்­மை­யி­னரை பலிக்­க­டா­வாக மாற்­றக்­கூ­டாது.

மேலும் பெரும்பான்மை மக்களிடம் குரோதத்தை ஏற்படுத்தி வன்முறைகளை தூண்டி விட்டு மொனராகலையில் போன்று எதிர்காலத்திலும் தேர்தல் வெற்றிகளை தக்கவைக்க திட்டமிட்டு செயற்படுவதும் தவறானது. எல்லா மக்களுக்கும் சமமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாது தொடர்ந்து இன, மத, ஜாதி வாத அரசியல் நடத்தினால் அரசாங்கத்தின் எதிர்காலம் அபாயகரமானதாக இருக்கும் என்பதனை அது மறந்து விடக்கூடாது என்றார்.