தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களுக்கு யூன் 9 அன்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் பொதுவாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் வலியுறுத்தி எழுதப்படிருந்தது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தென் சூடானில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு போன்றதொரு பொதுவாக்கெடுப்பை வடகிழக்கு தமிழர்கள் மற்றும் போரினால் புலம்பெயர்ந்து உலகில் பல பாகங்களிலும் பரந்து வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை விரும்பியது. அதனையே தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களும் வலியுறுத்தி இருந்தார். உண்மையில் இதுவே தனி நாடு அமைய ஏதுவாக இருக்கும்.

modi-jeya
சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்படும் பொதுவாக்கெடுப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை தீர்மானிப்பதற்கு திறந்த வழியாக இருக்கும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித்த தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தென் சூடானிய மக்கள் தமது இனவழிப்பில் இருந்தும் வன்முறையில் இருந்தும் விடுபடுவதற்கு தனி நாடே சரியான தீர்வு என்பதனை அங்கு நடைபெற்ற பொவாக்கெடுப்பின் மூலம் வேண்டிக்கொண்டார்கள். இது அவர்கள் தனிநாட்டினை பெற்றுக் கொள்ள வழிவகுத்தது.

ஒரு சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றனர். இதனையே திரு சம்பந்தன் அவர்கள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளர் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டச்சபையில் பொதுவாக்கெடுப்பிற்கான தீர்மானம் கொண்டுவந்திருந்தார். இதனையே யூன் 3 அன்று இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்களுடனா நேரடியான சந்திப்பின் போதும் வலியுறுத்தியிருந்தார்.

பிரேமச்சந்திரன் அவர்களுக்கு எ ழுதிய கடித்தில் ஒரு கணவன் மனைவிக்கு அடிக்கடி கொடுமமை செய்தால் மனைவிக்கு பிரிந்து சென்று வாழவதே நல்லது என பொதுவாக எல்லோரும் அறிவுரை கூறுவார்கள் என்ற உதாரணத்தை ஒப்பிட்டு எமது பிரச்சனையைக் குறிப்பிட்டுள்ளோம்

அரசாங்கம் தற்போது தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை மற்றும் வன்முறையை பரவலாக்கி உள்ளது. பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தமிழர்களை அடிமை கொள்ள சட்டங்களைளும் இயற்றப்பட்டுள்ளன. இனவழிப்பு போருக்கு பின்னரும் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் வன்முறைகள் நடைபெறுகின்றது. எனவே தமிழர்களுக்குள்ள ஒரே ஒரு வழி யாதெனில் தமிழ் பிரதேசங்களில் தமக்கென ஒரு நாட்டினை உருவாக்குவதே சிறந்ததாகும்.