ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட தண்டனை அரசியல் பின்னணியை கொண்டது என உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இதற்கு பின்னால் இன்று ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஒரு காரணம் என்பதை ஆழமாக சிந்தித்தால் புரியும்.

இன்று ஆட்சியை கைப்பற்றி இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் பெரும் பான்மையை பெற்று இருந்த போதிலும் தமிழ் தேசிய உணர்வுடைய தமிழ்நாட்டை மட்டும் வெல்ல முடியவில்லை, தமிழ் நாடே இந்தி மொழி பரவலாகத்திட்கும் தடையாக இருக்கிறது – தமிழ் தேசிய சிந்தனை வளர்ந்து நிற்கும் பிரதேசமாக இந்த தமிழகம் இருக்கிறது,

jaya2014-sep
இந்த மாநிலத்தை தமது கைக்குள் கொண்டுவருவது எப்படி என்ற திட்டத்தின் ஒரு படியே செல்வி ஜெயலலிதா மற்றும் அவருடன் நெருக்கிய உறவில் இருந்தவர்களுக்கு அளிக்கப்பட தண்டனை.

ஜனநாயக கோட்பாட்டின் படி அந்த மாநிலத்தின் மக்களின் மாநில சபை ஆகட்டும் மத்திய சபை ஆகட்டும் அதிக விருப்பவாக்குக்களை பெற்று, ஆட்சியில் இருக்கும் ஒருவரை,வெறும் ஒரு சில நீதிபதிகளின் விருப்பத்தில் அவரை ஆட்சி பீடத்தில் இருந்து நீக்குவது எப்படி என்று தெரியவில்லை.

அண்ணா ஹசாரே டெல்லியில் இந்தியாவில் சகல அரச – சட்ட மட்டத்தில் புறையோடி இருக்கும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது, அந்த ஊழல் வட இந்திய அரச மட்டத்தில் தான் அதிகம் இருந்ததால் அந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார், ஆனால் இதில் தண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டு இருக்கும் ஒரு சிலரை பார்த்தால், அரசில் நோக்கத்திற்காக கட்சி நோக்கத்திற்காக சிறை வைக்கப்பட்டவர்கள் அதிகம். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது திரண்டு எழுந்தது வட மாநிலங்களே அதிகம், காரணம் இந்த மாநிலங்களில் தான் ஊழல் பல மட்டங்களில் புறை ஓடிக்கொண்டு இருந்தது.

அதற்காக தமிழகத்தில் ஊழல் இல்லை என்று கூறவில்லை, ஆனால் இந்த விடயத்தில் தண்டனை அளிப்பதிலும் கூட அரசியல், தேர்தல் நோக்கம் தான் முன்னிற்கிறது என்பதை வலியுறுத்த வேண்டி இருக்கிறது.

இன்று வட இந்திய அரசியலில் இருப்பவர்கள் எல்லோரையும் எடுத்து பார்த்தால் – அவர்களின் ஆரம்ப வாழ்க்கைக்கும் – இன்று வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கும். மண்ணில் இருந்து வானத்தை எவ்வாறு திடீரென்று தொடார்கள் என்பது கேள்விக்குறி.

இன்று முக்கியமாக அடுத்த பேசப்படும் 2 ஜி விவகாரத்தை எடுத்து பார்த்தால் – தமிழக முக்கிய கட்சியாகத் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் பங்குதாரர் ஆக இருந்ததாக கூறப்பட்டும் அல்லியான்ஸ், அல்லது டாடா போன்ற நிறுவனங்களை பற்றி அதிகமாக பேசப்படுவதாக தெரியவில்லை.

அடுத்து இன்று தண்டிக்கப்பட்டு இருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் வெறும் கையேடு அரசியலுக்கு வந்தவர் அல்ல, அவர் தென் இந்திய சினிமாத் துறையை உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்கு வந்தவர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்வீர்கள், ஆகவே அவர் சொத்து குவித்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது- இது நம்பக்கூடியதாக இல்லை.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் பழிவாங்கலின் எதிரொலி தான் இதே வொளியே வேறு எதுவும் இல்லை.

இதை வட இந்திய அரசியல் கட்சிகள் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்துகின்றன என்பது தான் நாம் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இதை தமிழ் உணர்வாளர்கள் புரிந்து கொள்ளவார்கள் என்பதை நாம் உணர்கிறோம், அதை விட்டு விட்டு இதன் மூலம் ஆரசியல் லாபம் அடைபவர்கள், அடைய நினைபவர்கள், மக்கள் மனத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு, ஈழத் தமிழர் விடுதலைக்காக, தூக்கு தண்டனை கைதுகளுக்கு எதிராக செல்வி ஜெயலலிதா கொடுத்த குரல், மாநில அவை தீர்மானங்கள் அவர் செய்த முயற்சிகள், தமிழ் பாதுகாப்புக்கு சமஸ்கரித்த மொழி இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கொடுத்த கொடுத்துகொண்டிருந்த குரல் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட தண்டனை இட்டு ஈழத் தமிழர்கள் நாம் மிகவும் அதிர்ச்சியுடன் பார்த்தாலும், இதன் பின்னால அரசில் பின்னணி இருப்பதாகவே பார்க்கிறோம்.

இவர் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் – தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது விண்ணப்பம்.

– உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து.
worldtamilprotection@gmail.com