கடந்த செப்ரம்பர் மாதம் 22 ஆம் நாள் காச்சல் காரணமாக தமிழகத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபபட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா டிசம்பர் 6 ஆம் நாள் இறந்துள்ளதாக இந்திய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஏறத்தாள 70 இற்கு மேற்பட்ட நாட்கள் அவர் வைத்தியசாலையில் இருந்தபோதும் அதனை இரும்புத்திரை கொண்டு உலகின் பார்வையில் மறைத்த இந்திய பாதூப்பு மையயத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது அவர்கள் மிகப்பெரும் ஒரு அரசியல் படுகொலையை நிகழ்த்தியுள்ளதாகவே அறியபப்படுகின்றது.

 

JAYAA-11987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது அன்றைய தமிழகத்தின் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் நலன் தொடர்பில் விடுதலைப்புலிகள் எடுக்கும் முடிவில் தான் தலையிடப்போவதில்லை என்று கூறி விடுதலைப்புலிகளுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியதுடன், இந்திய மத்திய அரசையும் மறைமுகமாக எதிர்த்திருந்தார்.

 

எனினும் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் இடையிலான மேதல்கள் ஆரம்பமாகிய இரண்டு மாதங்களில் அவர் இறந்துபோனார். தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பார்வையிடுவதற்கு யாருக்கும் தடையிடப்படவில்லை.

 

ஆனால் ஜெயலலிதாவை தமிழகத்தில் இருந்து வெளிநாட்டு மருத்துவமனைக்கு நகர்த்துவதற்கு கூட இந்திய அதிகார தரப்பு முயலவில்லை அல்லது அதனை விரும்பவில்லை என்றே இங்கு கருத முடியும்.

 

அவருக்கு என்ன சுகவீனம் என்பதைக்கூட வெளிப்படையாக தெரிவிக்க அதிகாரத்தரப்பும், அதிமுக கட்சியும் விரும்பவில்லை. ஒரு வெளிப்படைத்தன்மை அற்ற முறையில் இருட்டு அறைக்குள் வைத்து எல்லா காரியங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

ஒரு சாதாரண சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல்வரை பார்ப்பதற்கு ஊடகவியலாளர்களையோ அல்லது மக்களையோ அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்லாது அவரை சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள் ஒரு மர்மம் நிறைந்த பயங்கரமாக மாற்றப்பட்டுள்ளது.

 

எப்போது இறந்தார், ஏன் இறந்தார், காச்சல் காரணமாக ஒரு மாநிலத்தின் முதல்வர் இறக்குமளவுக்கு இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்பம் பின்தங்கியுள்ளதா? ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? ஏன் வெளிநாட்டுக்கு அவர் கொண்டு செல்லப்படவில்லை என்ற கேள்விகளுக்கான பதில்கள் யாரிடமும் இல்லை என்பதுடன் அதனை கூற யாரும் அனுமதிக்கப்படப்போவதுமில்லை.

 

இந்த நிலையின் தான் ஜெயாவின் மரணம் ஒரு படுகொலை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அது ஒரு படுகொலை என்றால் ஏன் அது நிகழத்தப்பட்டது? எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?

 

இந்த கேள்விகளில் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதற்கான விடை சுலபமானது இது ஒரு உள்வீட்டு வேலை முதல்வருக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

அதனை எவ்வாறு நிகத்தியுள்ளனர்? ஆர்சனிக் போன்ற மெதுவாகக் கொல்லும் விசம் மூலம் அல்லது பொலோனிம் 210 போன்ற கதிர்வீச்சு ஆயுதம் மூலம் முதல்வர் வீழ்த்தப்பட்டுள்ளார். பொலோனியம் 210 இன் கதிர்வீச்சு உடலில் உள்ள அங்கங்களை ஒவ்வொன்றாக செயலிழக்கச் செய்துவிடும்.

 

ஆர்சனிக் இராசாயனமானது இரண்டு வகைப்படும் செறிவாகக் கொடுக்கப்படும் போது அது செங்குருதிக் கலங்களை அழித்து மாரடைப்பு மூலம் விரைவான மரணத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் செறிவு குறைவாக கொடுக்கப்படும் போது அறிகுறிகளை வெளிக்காட்டாது, காச்சல் போன்ற சாதாரண அறிகுறிகளுடன் மெதுவாக உள்உறுப்புக்களை செயலிழக்கச்செய்து, சில வாரங்களில் மாரடைப்பை ஏற்படுத்திவிடும்.

 

J-sasiபொலோனியம் 210 வகையான கதிர்வீச்சு இரசாயனங்களும் செறிவு குறைவாகக் கொடுக்கப்படும்போது மரணத்தை மெதுவாகவே கொண்டுவரும். எனினும் புற்றுநோய்க்கான அறிகுறிகளை அது காண்பிப்பதால் அதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் தலைமுடியை உதிரப்பண்ணிவிடும் என்பதால் ஜெயாவுக்கு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதப்படவேண்டும். அல்லது படுகொலை செய்தவர்கள் அதனை வேண்டுமென்றே தவிர்த்;திருக்கலாம்.

 

எனவே தற்போது ஒன்று தொளிவாகியுள்ளது. அதாவது ஜெயா திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தால். அவரை வெளிநாட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இந்த தகவல்கள் நிட்சயமாக வெளிவரும் என்பதை இந்திய அரசும், அதிமுக கட்சியும் நன்கு அறியும். அதாவது எல்லாம் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் நடந்து முடிந்துள்ளது.

 

ஏன் அவர் கொல்லப்பட்டார்?

 

இங்கு மூன்று காரணங்களை முன்வைக்க முடியும்

 

இந்திய மத்திய அரசின் உதவியுடன் இந்திய உளவு நிறுவனமான றோவின் பங்கு இங்கு முதன்மையானதாக கருதப்படுகின்றது. இந்தியா என்ற தேசத்தில் தாம் தொடர்ந்தும் அடிமையாக இருக்க வேண்டுமா என்ற சிந்தனை பல மாநிலங்களின் மக்களின் மனங்களை தற்போது ஆக்கிரமித்துள்ளது. அது தொடர்பான உந்துதல்களையும் அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்த நகர்வுகளில் சமூகவலைத்தளங்களின் பங்களிப்பு முக்கியமானது.

 

இந்திய வெறுப்பு மனப்பான்மை ஏனைய மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகம். 2009 ஆம் ஆண்டு சிறீலங்காவில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்குப் பின்னரே தமிழகம் நெருப்பெரிந்த நிலமாக மாற்றம் அடைந்துள்ளது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானங்களுக்கான அடித்தளமும் அதுவே.

 

அந்த தீர்மானங்களுக்கு பின்னரே அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனும் ஜெயாவை சந்தித்து சென்றிருந்தார். எனவே தமிழர்களை தொடர்ந்தும் அடிமையாக வைக்கவும், தமிழீழத்தை கண்காணிக்கவும் இந்திய புலனாய்வுத்துறைக்கு தமிழகம் என்ற களம் தேவை.

 

இரண்டாவாதாக சொத்து மற்றும் பதவி ஆசையின் பொருட்டு ஜெயாவின் உடன் இருந்தவர்களால் இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அதற்கான உதவிகளை இந்திய மத்திய அரசு வழங்கியிருக்கலாம். கடந்த செப்ரம்பர் 22 ஆம் நாளுக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களை பார்க்கும் போது இதனை உறுதி செய்வது சுலபமானது.

 

மூன்றாவதாக ஜெயாவின் உடன் இருந்தவர்கள் அதன் எதிர்க்கட்சியான தி.மு.காவிடம் விலைபோயிருக்கலாம். பதவிக்காக படுகொலை செய்வது என்பது தி.மு.காவின் மரபுகளில் ஒன்று. அதற்கான ஆதாரங்கள் ஏராளம்.

 

ஆகமொத்தத்தில் ஜெயலலிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவானது ஆனால் அதனை யார் எவ்வாறு எதற்கு மேற்கொண்டார்கள் என்பதே தற்போதைய கேள்வி. ஆனால் அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளிவரலாம்.

 

கத்தியின்றி, துப்பாக்கியின்றி, வெடிகுண்டு இன்றி சத்தமில்லாமல் மெல்லக்கொல்லும் இந்த உத்தியானது மிகவும் பயங்கரமானது. ஸ்ராலின் காலத்தில் இருந்து ரஸ்யாவில் இடம்பெற்றுவரும் இந்த கலாச்சாரம் தற்போது ஆசிய நாடுகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது. சிறீலங்கா அரசானது முன்னாள் போராளிகளை கொல்வதற்காக இந்த முறையை பின்பற்றியிருந்தது தொடர்பில் நான் முன்னர் எழுதிய பத்தியில் ரஸ்யா எவ்வாறு நாடு விட்டு நாடு அதனை நடைமுறைப்படுத்தியது என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருந்தேன்.

 

மெல்ல கொல்லும் இராசாயனத்தை பயன்படுத்தும் கலாச்சாரம் தற்போது தமிழகத்தில் ஆரம்பித்துள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வட இந்தியர்களின் கையில் இருந்து தமிழையும், தமிழ் இனத்தையும் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் உண்டு. இந்திய மத்திய அரசினினதும், அதன் உளவு அமைப்பான றோவினதும் நடைவடிக்கைகளை முறியடித்து அடிமைத்தனத்தில் இருந்து தழிழக அரசியலை நாம் முதலில் மீட்டெடுக்கவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை அதன் மூலம் நிரப்பினால் நாம் முன்னோக்கி நகர்கின்றோம் என்று பொருள்.

 

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.