Ger-PPTரோம் நகரை தலைமையகமாக கொண்ட மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள் முன்வைக்கும் யுத்த குற்றச்சாட்டுகளை ஆராயும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு ஜேர்மனியின் – பர்மன் நகரில் இடம்பெற்று வருகின்றது.

மக்கள் நிரந்தர தீர்ப்பாயம், இலங்கை மற்றும் இங்கு வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த முதலாவது கட்ட விசாரணைகளை கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தியிருந்தது. அதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் வலுவடைந்தமை காரணமாகவே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில சர்வதேச நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 புத்திஜீவிகள் அறங்கூறுனர் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த முறைகாண் ஆயத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நேற்றைய தினம், சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட “போர்தவிர்ப்பு வலயம்” காணொளியும் அறங்கூறுனர் சபையின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

டிச-10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் தமிழீழ இனப்படுகொலையில் பங்கேற்ற இந்தியா,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பங்களிப்பும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, தமிழீழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையா என்பது சாட்சிகளையும், தகுந்த ஆதாரங்களையும் கொண்டு கடந்த 2 நாட்களாக இந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்திவருகின்றது.
gandi-9
விசாரணையின் கடைசி நாளான இன்று , தமிழக நேரப்படி விசாரணை சரியாக பகல் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நடைபெறும். இந்த விசாரணையை இணையத்தில் நேரலையில் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. http://www.pptsrilanka.org/livestreaming/index.html இன்றைய விசாரணையில் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் மே 17 இயக்கத்தை சார்ந்த தோழர்.திருமுருகன் காந்தி, தோழர்.உமர் உள்ளிட்டோரின் சாட்சியங்களும், ஆதாரங்களும் விசாரணைக்கு வரவிருக்கின்றன.

இன்றுடன் முடிவடையும் விசாரணைக்கு பின் நாளை (10/12/13) இதனைப்பற்றிய தீர்ப்பு வழங்கப்படும். இனப்படுகொலைகளை பற்றிய விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வரும் இந்த Permanent Peoples tribunal -ல் ஒய்வு பெற்ற அய்.நா அதிகாரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.