டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக வழமை போல் கேர்ணிங் மற்றும் கொல்பெக் ஆகிய இரு நகரங்களில் நடைபெற்றது.

denmark2
இம்மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை வித்தாக்கிய மாவீரர்களை வணங்கிச் சென்றனர்.

மாவீரர்நாள் நிகழ்வானது பிராந்தியப் பொறுப்பாளரினால் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தேசியக்கொடியினை டென்மார்க் கிளைப்பொறுப்பாளர் ஏற்றிவைத்தார். ஈகச் சுடரினை மாவீரர் வீரவேங்கை வினிதா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர் நிகள்வுகளாக மலர்வணக்கம் சுடர்வணக்கம் அகவணக்கம் நடைபெற்றது.

denmark1
தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் விளக்கேற்றும் பொழுது மாவீரர்துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதன்பின்பு பொதுமக்களால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

இவைதவிர மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகள் இம்மாவீரர்நாள் நிகழ்வுக்கு மேலும் எழுச்சியை ஊட்டின.

denmark3
உலகறிந்த எம்தலைவர் உரைப்பதையே உறுதி மொழியென ஏற்று உறுதிபூண்டு கொள்கை மாறாமல் உயிரை விட உரிமை மேலென நேசித்த உத்தமர்கள் மாவீர்கள் அம் மாவீர்களின் கனவு நிறைவேறும் வரை ஓயாது செயற்படுவோமென இளையோர்களால் உறுதி கூறப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் மாவீரர் நாள் நிகழ்வு நிறைவு பெற்றுது.

——————————————————–

கட்டார் டோகாவில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது

qutar-1
கட்டார் டோகாவில் முன்னாள் போராளினால் தமிழீழ தேசிய மாவீரர் நாள் முன்னாள் போராளிகள் இணைந்து உணர்வுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.quatar2

———————————————————

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2014

தேசிய மாவீரர் நாள் 2014 பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது . பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ; தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை தொடர்ந்து எமது மண்ணுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களுக்காக வணக்க நிகழ்வு ஆரம்பித்தது .

belgium-2
சிறப்பு பேச்சாளராக யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியர் தமிழ் மக்கள் மாவீரச் செல்வங்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணிகளை , தேசியக் கடமைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.

தேசிய மாவீரர் நாளில் கலந்துகொண்ட மக்கள் தமது பிள்ளைகளை வணங்கியதோடு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொண்டனர் .belgium-1