கூகுளுக்கு CEO தமிழர் தமிழர் என்று பெறுமை பட்டுக்கொள்வோம். சரி, குறைந்த பட்சம் தன்னுடைய துறையில் தமிழுக்கோ, தமிழர்க்கோ செய்த செய்த ஒரு நன்மைய சொல்லுங்கோ பார்ப்பம்…! ஒன்றுமில்லை.

செய்யவேண்டியவை: கூகுள், யூடியூப் இரண்டிலுமே ஈழ இனப்படுகொலையைக் குறிக்கும், படங்கள், காணொலிகள் விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் இனப்படுகொலை என்ற சொல்லை வைத்து சில இணையதளங்களில் கட்டுரைகள் கூட நீக்கப்பட்டிருக்கின்றன. 2009,2010 இல் இருந்த இறுதிப் போர் அவல நிழற்படங்கள், காணொலிகள் இன்றில்லை. வடிகட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது யூடியூப்பில் “ஈழம்” என்ற சொற்பாவனைக்கும் தடை/மட்டுப்பாடு வந்திருப்பதாக அறிய முடிகிறது.

தமிழர்களிடம் இந்த விடயங்களை சந்ததி கடத்துவதற்கு வேறு மார்க்கங்கள் இல்லை. இது குறித்து வெளிவந்த நூல்களும் மிகச் சொற்பமானவை. எனவே இணையவெளியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. வரலாறு முழுதும் வஞ்சிப்பட்ட ஓர் இனம், மிக வேகமான – பலமான ஊடக சக்தியாக வளர்ந்து நிற்கும் எண்ணிம தளங்களிலும் நவீனமயப்பட்ட வஞ்சிப்புக்களை சந்திக்கிறது.

தீர்வு 01: நம்மிடம் ஏகப்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட மேதைகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கின்றனர். “ஈழம்” சொல் நீக்கம், உள்ளிட்ட இணைய அழிப்புக்களுக்கு எதிராக இந்த ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர் முடியும். ஏனெனில் இதுவும் ஒரு வகையில் நுகர்வாளர் பாதிப்புத்தான். 8 கோடிப்பேர் தமிழர்கள் என்கிறார்கள்.

அதில் குறைந்தது 4 கோடி பேராவது கூகுள்,யூடியூப் மாதிரியான எண்ணிம தளங்களின் பிரதான நுகர்வோர்களாக இருப்பார்கள். எனவே இந்த நுகர்வாளர்களின் அபிலாசையை, மரபை, வரலாற்றைத்தான் அதே நிறுவனங்கள் நீக்கிவருகின்றன. இது சர்வதேச தளத்தில் நிகழ்வதால், சர்வதேச சமூகத்தினரையும் ஈர்க்கும் செய்தியாக- தமிழர்களை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். இவ்வளவு காலமும் இதே விடயங்கள் இங்கு இடம்பெற்றன. இப்போது இந்த வியாதி சர்வதேச ஊடகங்களையும் தொற்றக்கூடிய வகையில் இரண்டு கோடி மக்கள் இரவு பகலாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். வெற்றியும் காண்கிறார்கள்.

தீர்வு 02: கூகுளில் தங்கியிராமல், VIMEO மாதிரியான தளங்களைத் தமிழர்களுக்காக மட்டும் உருவாக்கிக் கொள்வது.

தமிழர்களுக்கு முன்னால் சர்வதேச ரீதியில் கவனமீர்க்க கூடிய, பேசப்பட வைக்கக்கூடிய சர்ச்சைகள், பிரச்சினைகள் அடிக்கடி வந்துமறைகின்றன. “ஈழம்” நீக்கம் எல்லாம் எவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய விடயம். தமிழ், தொல்லியல், வரலாற்று புலமையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாராவது ஒருவர் ஆங்கிலத்தில், சர்வதேச ஊடகமொன்றில் இந்தப் பிரச்சினை குறித்து ஏதாவது எழுதினார்களா என்று பார்த்தால் நானறிந்த வகையில் எதுவும் நிகழவில்லை. எனவே, அடுத்து வரும் தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராவோம்.”

– by Jera Thampi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here