பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் தடைகளை தாண்டி கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி நடைபெற்றுள்ளது.

 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது பல்கலைகழக பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பல்கலைக்கழக வாயில் வரைக்கும் ஊர்வலமாக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்று அமைதிவழியில் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிகழ்வில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மாணவர்களும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிகழ்வை நடத்தக்கூடாது என ஏற்கனவே பொலீசார் உத்தரவு பிறப்பித்திருந்தும் மாணவர்கள் அவற்றையெல்லாம் தாண்டி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.