தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்

0
1441

இன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய தாக்குதல்களில் இருந்து காப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற முனைப்பு மேலோங்கியுள்ளது.

 

போர்கள்இ மோதல்கள் நடைபெறும் போது பொதுமக்களை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்இ கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பன்னாட்டு நடைமுறைமரபுகள் மற்றும் உடன்படிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை அழிவுத் தவிர்ப்புக்கான வழிகாட்டு கோவைகளாக மட்டுமன்றி குற்றமிழைப்பவர்களை நீதியின் முன் நிறுத்தக் கூடியவையாகவும் அமைகின்றன. இந்த வகையில் இரசாயனஇ உயிரியல் மற்றும் கொத்துக்குண்டுப் பாவனை என்பன மிகவும் பாரதூரமான மானுடத்திற்கெதிரான குற்றச் செயல்களாகவே கொள்ளப்படுகின்றன.

 

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அப்பாவித் தமிழ்மக்கள்இ சிறிலங்காவின் பேரழிவு ஆயுதங்களால் குறிவைத்துக் குதறப்பட்டபோது அதைத் தடுப்பதற்கு யாரும் முயலவில்லை. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பேசப்படுகின்ற நிலைமையிலும் அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் நிலையிலும் நீதிக்கான எந்த முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை.

 

அண்மைக்காலத்தில் சிரியாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பவனை தொடர்பில் செய்திகள் வந்தவுடனேயே ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. ஐ.நா வின் வேதியியல் ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பின் (OPCW- Organisation for the Prohibition of Chemical Weapons) கண்காணிப்பாளர்கள் உண்மை கண்டறியும் நடடிக்கைக்காக அனுப்பிவைக்கப் பட்டனர். அங்கு நடைபெற்ற பரிசோதனை நடவடிக்கையில் சிரிய அரசபடைகளால் தடைசெய்யப்பட்ட வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருவதாக அவர்கள் அறிக்கையிட்டனர். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என பலதரப்பிலுமிருந்தும் பலமான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

 

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை உரத்துப் பேசும் தரப்புகளைஇ அதற்கான நீதி வழங்கப்படவேண்டும் என முயற்சிகளை மேற்கொள்ளும் தரப்புகளை காணமுடியவில்லை. தத்தமது சொந்த நலன்களை பொறுத்தே ‘மனிதவுரிமை’ பேசும் இன்றைய உலகில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கான குரலை ஓங்கி ஒலிக்கவேண்டியது கட்டாயமாகிறது.

 

தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களை சிறிலங்கா பயன்படுத்தியுள்ளது என்பதை ஐ.நாவின் அபிவிருத்தி அமைப்பின் கண்ணிவெடிகள் தொடர்பான நடவடிக்கைக்குழு ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தும் இன்றுவரை இவ்விடயம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஐ.நாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி நிற்கிறது.

 

ஐ.நா அபிவிருத்தித் திடடத்தின் (UNDP) கண்ணிவெடிகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர் அலன் போஸ்டன் (Allan Poston) சிறிலங்காவின் கொத்துக் குண்டு பாவனை தொடர்பில் ஐ.நாவுக்கு தகவல் தந்திருந்தார். கிடைக்கப்பெற்ற ஒளிப்படங்கள் மற்றும் சிதறுதுண்டுகளை ஆராய்ந்ததில் தான் இந்த முடிவிற்கு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். (”After reviewing additional photographs from the investigation teams, I have determined that there are cluster sub-munitions in the area” ‘ ) அங்கு கண்டெடுக்கப்பட்ட கொத்துக்குண்டின் பகுதிகள் ரசியத் தயாரிப்பான RBK-500_AO-2,5RT_aerial cluster  bomb  வகையைச் சார்ந்தவை எனவும் UNDP வல்லுநர்கள் உறுதிசெய்திருந்தனர்.

 

தமிழர் தரப்பால் கொத்துக்குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அதனை சிறிலங்கா மறுதலித்துவந்தது. ஐ.நாவின் பிரதிநிதிகள் அதனை ஆதாரத்துடன் உறுதிசெய்த வேளையிலும் கூட சிறிலங்கா அதனை முற்றாக நிராகரித்தது. தங்களிடம் இல்லாதஇ தாம் ஒருபோதும் கொள்வனவு செய்யாத குண்டை எப்படி வீசமுடியும் என ஏளனமும் செய்தது.

 

ஆனால் சிறிலங்கா கொத்துக்குண்டுகளை பாக்கிஸ்தானில் இருந்தும் கொள்வனவு செய்திருப்பதை அந்நாட்டின் ஆயுத ஏற்றுமதி அமைப்பின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முஹமட் பாரூக் உறுதிசெய்திருந்தார். அவர் 2008 ஜூலை பாகிஸ்தானிய டோன் (Dawn) செய்த்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் இதைத் தெரிவித்திருந்தார். (It has been reported that Sri Lanka has purchased cluster bombs, deep penetration bombs and rockets and UAVs from Pakistan) இது தவிர சிறிலங்கா தரப்பால் வன்னியில் தமிழர்கள் மீது வேதியல் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆதாரங்களையும் நாம் கண்டுகொள்ளமுடியும். சிறிலங்கா அரசால் பரவலாக பயன்படுத்தப்பட்ட ரசியத்தயாரிப்பு ஆயுதமான RPO-A  Shmel  thermobaric rocket launcher மிக ஆபத்தான வேதியல் ஆயுதமாகும். சிவிலியன் இலக்குகளுக்கு மிகுந்த பாதிப்பைத் தரும் என்றவகையில் இவ்வாயுதம் பொதுவாக தடை செய்யப்பட்ட தொன்றாகக் கொள்ளப்படுகிறது.

 

சிறிலங்கா அரசாங்கம் இதனை உக்கிரேன் நிறுவனமொன்றிடமிருந்து இரசிகமாக கொள்வனவு செய்த்திருந்தது. இந்த கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் காரணமாக இந்த விடையம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதனை ஏற்றே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சிறிலங்கா படைத்துறை அவை காலாவதியானவை எனக்கூறி சமாளிக்க முயன்றது.

 

ஆயினும் இத்தகைய ஆயுதங்கள் சிறிலங்கா படைகளால் வன்னியில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டமை வெளிப்படை. பயன்படுத்தப்பட்ட வெற்று எறிகணைத்தொகுதிகள் பல அங்கு கண்டெடுக்கப் பட்டிருந்தமை இதற்குச் சான்றாகும். இந்த ஆயுதத்தில் உள்ள எரிபொருள்வேதியல் கலவையானது (FAE fuels) மிகவும் நச்சுத் தன்மையானது. இந்த வெடிபொருள் மிக மோசமான எரிகாயங்களை ஏற்படுத்துவதுடன் இ இதனை சுவாசிப்பதாலும் மிக ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன.

 

மேலும் இறுதிக்கட்ட போரின் போது வன்னியில் பணியாற்றிய வைத்தியர்களின் குறிப்புகளும்இ ‘சாட்சியங்கள் இல்லாத போர்’ ( War Without Witness) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான விசாரணையின் முடிவுகளும் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை அறிவியல் ரீதியில் நிரூபித்து நிற்கின்றன.

 

சிறிலங்காப் படையினரால் வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டமையும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமையும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள் இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வைத்தியர் ஒருவரால் மறுசீராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் வேதியல் அறிக்கையின்படி காயங்களில் Triethanolamine (C6H15NO3) ,  Phosgene (CCl2O) போன்ற வேதியல் பொருட்கள் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெண் பொஸ்பரஸ் (White phosphorous) பயன்பாடு தடைசெய்யப்பட்ட தொன்றாகும். ஆனால் வன்னியில் இந்த வேதியல் பொருள் சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்பட்டமை அப்போது செட்டிகுளத்தில் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டு வைத்தியர்களால் அறிக்கையிடப்பட்டள்ளது. (Tamil civilians who escaped the Sri Lankan military bombardment, treated by French doctors, included those with injuries from phosphorous bombs, AFP reported)
இவைதவிர சிறிலங்காவின் ‘உண்மை கண்டறியும்’ ஆணைக்குழுமுன் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் இவ்வாறான தடைசெய்யப்பட்ட ஆயுதப் பயன்பாடுபற்றி தங்கள் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளார்.

 

மேற்கண்ட விடயங்களின் அடிப்படையில் சிறிலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து அனைத்துலக சமூகம் விலகி நிற்பது வியப்பளிக்கிறது. தானே கண்டறிந்த ஆதாரங்கள் கூட கண்முன்னே இருக்கஇ ஐ.நா ஏன் இன்னும் ஒரு நீதி விசாரணையினை முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது.

 

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சிறிலங்கா தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தியமை தொடர்பில் போதுமான விழிப்புணர்வுகள்இ வெளிப்படுத்தல்கள் எம்மவர் மத்தியில் இல்லாமல் இருப்பது மிக வேதனையான விடயமே. இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் வாழ்ந்த சராசரி மனிதன் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஆயுதங்கள் தொடர்பான முதல்தர பட்டறிவு இருக்கும். அவற்றை அறிவியல் ரீதியில் ஆவணப்படுத்துவது அவர்களுக்கு இலகுவான விடயமல்ல. இந்த கொடூர நடவடிக்கைகளை உரியமுறையில் ஆவணப்படுத்தி அறிவியல் ரீதியான நிறுவல்களுடன் அனைத்துலக சமூகத்துக்கு கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு எமது சமூகம் சார்ந்த ஆர்வலர்கள்இ புத்திஜீவிகள்இ துறைசார் வல்லுநர்களையே சாரும்.

 

இந்த விடையத்தில் தமிழ் சமூகம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்காத பட்சத்தில் சிறிலங்காவின் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் வலிமையானதொரு துருப்புச்சீட்டை நாம் இழந்துவிடும் நிலைமை தவிர்க்க முடியாததாகிவிடும்.

 

நன்றி: இலக்கு (21 – 04 – 2019)