இன்று (05.11.2014) இரவு 7.30 மணிக்கு லைக்கா நிறுவனத்தின் தமிழக முதலீட்டை கண்டித்து போராட்டம் செய்து சிறை சென்ற மாணவர்கள் மற்றும் தோழமைய இயக்க தோழர்கள் புழல் மத்திய சிறையில் இருந்து பிணையின் வெளிவந்தனர்.

த.பெ.தி.க. துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி, சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன், வழக்கறிஞர் ராஜவேலாயுதம் ஆகியோர் சென்னை செசன்ஸ் நீதி மன்றத்தில் 5-11-2014 இன்று கலை 11 மணியளவில் பெயில் வாங்கி பின் 1 மணியளவில் வழக்கறிஞர் ஜான் அவர்கள் எக்மோர் நீதி மன்றத்தில் சிறையிலிருக்கும் 12 தோழர்களுக்கும் ரூ.24,000/- கட்டி 24 பிணையில் தோழர் அப்பு தவிர மற்ற தோழர்கள் சென்னை புழல் சிறையிலிருந்து வெளியே வருவதற்கான வேலைகளை செய்தார்.

student-4
இதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள், பொறுப்பாளர்கள், தமிழர் பறக்கும் படை பொறுப்பாளர் வீரலட்சுமி மற்றும் தோழர்கள், மே 17 இயக்கம் திருமுருகன் மற்றும் தோழர்கள் காலையிலிருந்து சிறையிலேயே இருந்து வெளியே வருவதற்கா உதவினார்கள்.

பின்பு இரவு அனைத்து தோழர்களையும் அழைத்துக் கொண்டு மிர்சா சாகிப் மார்க்கெட்டில் இருந்து ராயபேட்டை வி.எம்.தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகில் அனைத்து தோழர்களையும் 100க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் த.வா.கூட்டமைப்பு தோழர்கள், மாணவர்கள் வரவேற்று அழைத்துவந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்தனர்.

students
பின்பு அனைவரும் விடுதலையான தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். தோழர் அப்பு இரவிலேயே வெளியே வருவதற்கான சில வேலைகளை வழக்கறிஞர் வாசு அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் மாணவர்கள் வெளியே வருவதற்கு உதவிய தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் உள்ள அனைத்து தோழர்களுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

– படங்கள் சோ.மதிவாணன்,
த.பெ.தி.க. செய்திப்பிரிவு – சென்னை மாவட்டம்.