தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐ.நாசபையின் தலைமையில் பொது வாக்கெடுப்பு
என தமிழ்நாடு அரசு முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிக்கான ஒன்று கூடலாக தமிழக மாணவர்கள் இன்று கவன்யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று சென்னையில் தலைமை தபால் நிலையம் பாரிமுனை, முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

pathivu-20news-3
காலை,11.30 மணியளவில் திரண்ட மாணவர்கள்.

இந்திய அரசே!

ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் திட்டமிட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரியும் இலங்கை அரசு மீது ஐ.நா முன்னிலையில் சர்வதேச சுயாதீன விசாரணை உடனே நடத்து.

ஈழத்தமிழர்களின் நிலத்தை இலங்கை அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்து!

ஐ.நா முன்னிலையில் பொது வாக்கெடுப்பை நடத்து!!!

என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மாணவர்கள் விடுத்த செய்தியில் :

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு , ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி தீர்மானங்களை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த தீர்மானங்களை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், இலங்கை அரசுக்கு துணையாக இருந்ததை நாம் அறிவோம்.

இந்தியாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்,ஜூன் 3 ஆம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்தமுதலமைச்சர், அவரிடம் ஒப்படைத்த கோரிக்கை தீர்மானங்களில்- ஈழத் தமிழர்களுக்கு விடுதலைக்குஇந்தியா முன்னிற்க வேண்டும் என்றும், ஐநா சபையில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை புலன் விசாரணை செய்யக் கோரியும் ஒரு தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழீழ மக்களிடையே – ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் தமிழீழத்தை வலியுறுத்தி பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக முதலமைச்சரின் இந்த தீர்மான்ங்களை தமிழக மாணவர்கள், புலம்பெயர்ந்ததமிழர்கள் , மற்றும் தமிழினஉணர்வாளர்கள் வரவேற்கின்றோம். மேலும் தமிழக அரசின் தீர்மானங்களுக்கு வலுசேர்க்கவும் , இதனை விரைந்து செயல்படுத்தக் கோரியும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழக மாணவர்களாகிய நாங்கள் , ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான எங்கள் ஆதாரவை தெரிவிக்கின்றோம்.

என்று தெரிவித்தனர் .

இவ் போராட்டத்தில்

தனித் தமிழீழம் ஒன்று தான் தீர்வு

இலங்கையா? தமிழ்நாடா?
இந்திய அரசே முடிவு செய்!

இனப்படுகொலை இலங்கை மீது
பொருளாதார தடை விதி!

இந்திய அரசே!
இலங்கைக்கு எதிரான
சர்வதேச விசாரணையை
ஐ.நா.வில் கொண்டுவா!

இந்திய அரசே!
தொடரும் இலங்கை இனவெறியை தடுத்து
நிறுத்து !

ஒரே தீர்வு! ஒரே தீர்வு!
பொதுவாக்கெடுப்பே ஒரே தீர்வு!

இந்திய அரசே !
இனப்படுகொலை இலங்கையின் கொட்டத்துக்கு முடிவு கட்டு!

என்ற கோசங்களை எழுப்பினர்.

இதில் மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு, முற்போக்கு மாணவர் முன்னணி ,பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா. தமிழர் நலன்காக்கும் இயக்க்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்திய தூதரகம் முன் நீதிக்கான ஒன்று கூடல்களை இன்று முன்னெடுக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: பதிவு