தனிப்பட்ட உயிர்த் தியாகங்களை விட மக்கள் புரட்சியே தமிழருக்கான தீர்வுக்கு வழி: தமிழ் அரசியல் கைதிகள்

0
607

senturanதமக்காக வேறு எவரும் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து கொள்ள வேண்டாம் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாண மாணவன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

 

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரை மாய்த்துக் கொண்ட பிரிவு தங்களை மேலும், மீள முடியாத துன்பத்திற்கு தள்ளிவிட்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

 

இதுபோல் வேறு எவரும் இவ்வாறான தியாகங்களைச் செய்யக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மாணவன் எமது விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து ஒவ்வொரு தமிழரும் தமது வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் கறுப்புக் கொடி ஏற்றி இரங்கலை வெளியிடுமாறு கோரியுள்ளனர்.

 

எமது மக்களின் ஒவ்வொரு இழப்பிலும் புன்னகைக்கும் ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை இவ்வாறான உயிரிழப்புக்கள், தியாகங்களின் ஊடாக அடைந்து விட முடியாது என தமிழ் அரசியல் கைதிகள் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

எனவே தமிழ் மக்களுக்கான முழுமையான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அது மாபெரும் மக்கள் புரட்சியொன்றின் மூலமே பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

தனிப்பட்ட ரீதியிலான உயிர்த் தியாகங்கள் தமக்கான விடிவினை எட்டித் தராது.

 

கூட்டான மக்கள் புரட்சி ஒன்றின் ஊடாக தெற்கின் சிங்களத் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும்,

 

அவ்வாறான அழுத்தங்களின் ஊடாகவே இலக்குகளை எட்ட முடியும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.