walk-eelam2பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையின் பிரதிகளை விசாலாட்சி, பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அதில் தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்களிடம் வாக்கெட்டுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனபடுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. சபையில் வலியுறுத்தவும், தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் மற்ற பகுதியில் வாழும் இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிதம்பரத்தில் தமிழ்த் தேசிய நாள் !

இதனிடையே, 1990 ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியதற்காக த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மீது பிரிவினைத் தடைச் சட்டத்தை ஏவி சென்னை நடுவண் சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் த.தே.பொ.க. பின் வாங்கவில்லை. அன்றிலிருந்து தமிழர்களின் அரசியல், பொருளியல், மொழி உள்ளிட்ட பண்பியல் கூறுகளின் கொள்கலனாக கூர்மைப் படுத்தப்பட்ட இலட்சியமாகத் தமிழ்த் தேசியத்தை வளர்த்து வருகிறது.

இந்த பிப்ரவரி 25 ஆம் நாளை தமிழ்த் தேசிய நாளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடைபிடிக்கிறது.

இதன் படி இன்று காலை 8.45 மணியளவில், சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோதேவராசன் தலைமையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேள் அவர்கள் ஏற்றி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து காசுக்கடைத்தெரு , மேலவீதி, கொத்தவால்தெரு,உள்ளிட்டப் பகுதிகளில் தோழர்கள் பேரணியாக சென்று தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கைகளை பொதுமக்கள், வணிகர்களிடம் வழங்கி தமிழ்த் தேசிய நாளினைக் குறித்து விளக்கி பேசினர்.

இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி துணைப்பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணியசிவா, தோழர்கள் பா.பிரபாகரன், மு.சம்பந்தம், ஆ.யவனராணி,செ.மணிமாறன், பா.கா.கார்த்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய நாளையொட்டி மாலை 4.30 மணி அளவில் தமிழக மாணவர் முன்னணி சார்பில் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் தோழர் அ.தனராஜ் தலைமையேறார். தோழர் வே.சுப்பிரமணிய சிவா தமிழ்த் தேசிய நாள் குறித்தும், தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் புலம், வேளாண் புலம், வணிகவியல், பொருளியல் மற்றும் தமிழ் உள்ளிட்ட கலைத்துறை மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்த் தேசிய நாளையொட்டி சிதம்பரம் நகரில்
”எமது தேசிய இனம் தமிழர்!
எமது தேசிய மொழி தமிழ்!
எமது தேசம் தமிழ்த் தேசம்!
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு”
என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள்
உணவாளர்கள், பொதுமக்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தோழர்கள் அனைவருக்கும்
தமிழ்த் தேசிய நாளின்
புரட்சிகர வாழ்த்துகள் !

**எமது இலக்கு தமிழ்த் தேசக் குடியரசு **

தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி