தமிழகத்தின் பல பகுதிகளில் சல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இது தமிழர்களின் வெற்றி, இந்தி அரசின் தோல்வியை காட்டுகிறது !

0
745

நியாயமாக நல்ல ஒருங்கிணைப்புடன் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற வேண்டிய சல்லிக்கட்டு விளையாட்டை உச்சநீதிமன்றத்தின் தடையின் காரணமாக இப்போது எந்த முறைப்படுத்தலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டு நடந்துள்ளது. ஆங்காங்கே மாடுகளை அவிழ்த்து விட்டும் பொதுமக்கள் பலரும் மாடுகளை சூழ்ந்து கொண்டும் எந்த வித முறைப்படுத்தலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டுகள் நடந்துள்ளன. இதனால் தமிழினம் தான் அடங்கி விடப்போவதில்லை என்பதை இந்தி அரசிடமும், தமிழக எடுபிடி அரசிடமும், பீட்டா அமைப்பிடமும் உறுதியாக தெரிவித்துள்ளனர். இதைத் தான் இந்த அதிகார சக்திகள் விரும்பியதா ?

 

ஒவ்வொரு ஆண்டு மட்டுமல்லாமல் இனி ஒவ்வொரு மாதமும் சல்லிக்கட்டு நடக்கும் என்பதை ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் காவல்துறை மக்களையும் மாடுகளையும் அடக்க முடியுமா?

 

ஆந்திராவில் எந்த சிக்கலும் இல்லாமல் சல்லிக்கட்டு விளையாட்டு நடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் பதற்றத்துடன் சல்லிக்கட்டு நடக்க வேண்டும்? சல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தமிழக அரசு காவல்துறை உதவியுடன் ஏன் நம் பண்பாட்டை ஒடுக்க வேண்டும்?

 

தமிழின விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் அதிமுக அரசு இதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று தமிழர்கள் நாம் கோரிக்கை வைப்போம். எந்த அரசுகளின் அடக்குமுறைக்கும் நாம் அடங்க மாட்டோம் என்பதையும் உலகிற்கு உறக்கச் சொல்வோம்.

நன்றி: ராஜ்குமார் பழனிச்சாமி