தமிழகத்தில் ஊடுருவியுள்ள சிங்கள மற்றும் இந்திய அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போர் அகிம்சையில் இருந்து ஆயுதப்போராக பரிணாமம் காணும் நிலையை அடைந்துள்ளது.

tn-student-usa
அதற்கான சூழ்நிலையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையும், இந்திய மத்திய அரசும் உருவாக்கியுள்ளது.

இந்திய மத்திய அரசின் தமிழின விரோதப்போக்கிற்கும், அதற்கு துணைநிற்கும் துரோகக் கும்பல்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் எதிராக இதுவரையிலும் அகிம்சைப்போரை நடத்திய தமிழக மக்கள் மீதும், மாணவர்கள் மீதும் தனது அடக்குமுறைகளை பிரயோகித்த தமிழக அரசு தற்போது மாணவர்களின் போராட்டத்தை அழிப்பதில் கங்கணம் கட்டி நிற்கின்றது.

இதனைத் தான் கடந்த 23 ஆம் நாள் தமிழக காவல்துறையினரால் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

சினிமாத்துறையின் ஊடாக தமிழகத்தின் எழுச்சிகளை கட்டுப்படுத்த முற்பட்டவர்களின் நம்பிக்கையில் தற்போது மாணவ சமூகத்தின் போராட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவசமூகத்தின் எழுச்சியின் முன்னால் சினிமாத்துறையின் நாடகங்களும், தமிழக அரசியல்வாதிகளின் ஏமாற்றுத்தனங்களும் தகர்ந்துபோகும் என்ற அச்சம் தமிழகத்தை சூழ்ந்துள்ளது.

எனவே தான் தமிழகக் காவல்துறை சிறீலங்கா அரசின் முதலீட்டாளர்களை கைவிட்டு மாணவர்கள் மீது பாய்துள்ளது.

ஆனால் இது தான் தமிழகத்தின் விடுதலைக்கான ஆரம்பமாகும், ஏனெனில் எந்த ஒரு விடுதலைப்போரை எடுத்துக்கொண்டாலும் அதனை ஆரம்பித்தது மாணவ சமூகம் தான்.

கியூபாவின் விடுதலைப்போரை ஆரம்பித்தபோது பிடல் கஸ்ரோ ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர். தமிழனத் துரோகி துரையப்பாவின் காருக்கு பெற்றோல் குண்டு வீசியபோது தியாகி சிவகுமாரனும் ஒரு மாணவர் தான்.

அதே துரையப்பாவிற்கு தண்டனை வழங்கி தமிழீழ விடுதலைப்போரின் ஆயுதப்போரை ஆரம்பித்தபோது தமிழீழத்தின் தேசியத் தலைவர் திரு பிரபாகரனும் ஒரு மாணவர் தான்.

அன்று சிறீலங்கா காவல்துறை எம்மைத்தேடி வந்தது ஆனால் நாம் கலங்கவில்லை, அதன் பின்னர் சிறீலங்கா இராணுவம் வந்தது தமிழ் மக்கள் அஞ்சி ஓடவில்லை, பின்னர் முப்படையும் வந்தது, அதன் பின்னர் உலகின் ஐந்தாவது பெரும்; இராணுவத்தை கொண்ட இந்தியாவின் இலட்சக்கணக்கான படைகள் எமது தேசத்தை ஆக்கிரமித்தன எனினும் விடுதலைப்போரை அவர்களால் நசுக்க முடியவில்லை.

பாரிய இழப்புக்களைச் சந்தித்த போதும் இன்று எமது விடுதலைப்போர் ஐ.நாவின் வாசற்கதவைத் திறந்துள்ளது. தமிழ் இனத்தின் விடுதலைப்போர் பற்றி உலகம் இன்று பேசுகின்றது. விடுதலைப்புலிகள் என்ற நாமம் உலகின் எல்லா பாகங்களிலும் உணரப்பட்டுள்ளது.

எனவே அப்பாவி மாணவர்களை தமிழக அரசு விடுதலை செய்வதுடன், தமிழ் இனத்தின் விடிவுக்கான வழிகளை அது தேடவேண்டும். இல்லையேல் அதன் விடுதலையை நோக்கி மாணவ சமூகம் பயணிக்கும். தமிழகக் காவல்துறையையோ அல்லது இந்திய இராணுவத்தையோ கண்டு அஞ்சாத ஒரு தலைவன் தோன்றுவான்.

ஈழம்ஈநியூஸ்.