2013 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய வேல்முருகனும் நானும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினோம். அந்தப் பேச்சில் வேல்முருகனை எப்படியாவது ஈவேரா கருத்தியலிலிருந்து பிரித்து முழு தமிழ் தேசியவாதியாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு நான் பேசினேன் அனைத்தையும் கேட்டு கொண்டு சில இடங்களில் பதிலளித்த அவர் சற்றே ஒரு வாரம் கழித்து ஈவேரா இல்லைன்னா…. என பேட்டி கொடுத்தார்.

 

அதனைத் தொடர்ந்து எமது கட்சியையும் உள்ளடக்கிய தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது அதில் 156 அமைப்புகள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்டு மூன்றாவது நபராக பேசிய நான், தமிழின உரிமைக்காக இங்கே இவ்வளவு பேர் கூடி உள்ளீர்கள்.

 

தேர்தல் என்று வரும்போது இவ்வளவு பேரும் சேர்ந்து ஓர் அணியாக நிற்காமல் அவரவர் விருப்பப்படி அதிமுக திமுகவுக்கு சென்று விடுகிறீர்கள் நாலரை ஆண்டு காலம் ஒரு அரசியலும் அடுத்த ஆறு மாதம் இன்னொரு அரசியலும் பேசுவது இந்த இனத்திற்கு பயனைத் தராது என்றேன்.

 

மேலும் நாம் போராடுவதற்கான பிரச்சினையை கொடுத்தவர்களே அவர்கள் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றேன் அதற்கு பதிலளித்த வேல்முருகன் அரசியல் வேறு இந்த கூட்டமைப்பு வேறு என்று பதிலளித்தார்.

 

அவர் கட்சித் துவங்குவதற்கு முன் நெய்வேலியில் போராட்டம் ஒன்றை நடத்தினார் நெய்வேலி சென்றிருந்த நான் தற்செயலாகச் சந்தித்தேன் அப்போது உங்கள் கட்சியில் முதல்வர் வேட்பாளராக யார் இருப்பார்கள் என்று கேட்டேன். அதற்கு பதில் அளித்த அவர் என்னுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் வன்னியராக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் வன்னியராக தான் இருப்பார் என்றார் அவர் அப்படிக் கூறியது ஒன்றும் தப்பில்லை ஆனால் அவர் நெருக்கமாக பாவித்த விசிக விடம் இந்தக் கருத்தை அவர் சொல்வாரா?

 

ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை என அறிவிப்பு வந்தது அந்த அறிவிப்பு வந்தவுடன் பெற்ற தாயை தூக்கி சிறையிலிடுவது போல கத்தி கத்தி கூச்சலிட்டார் இந்த வேல்முருகன். அவர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார் என கேள்வி கேட்டு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இருந்து எமது கட்சி விலகியது.

 

ஓராண்டுக்கு முன் வேல்முருகன் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார் என்ற செய்தி கேட்டு பலரும் பாராட்டினர் நானும் பாராட்டினேன். ஆனாலும் இவர் ஒரு சரியான நபர் அல்ல உள்ளுக்குள் ஏதோ ஒன்றை வைத்து தான் ஒவ்வொரு வேலையும் செய்கிறார் என்பது மட்டும் என்னுள் என் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.

 

அதற்கேற்ப சற்றே 3 மாதத்திற்கு முன்பு தெலுங்கர் முன்னேற்றக் கழக ஸ்டாலின் தான் சிறந்த நிர்வாகத்தை கொடுப்பார் என ஒரு பேட்டி கொடுத்தார் அப்போதும் அதற்கு கண்டனம் தெரிவித்து முகநூலில் செய்தி வெளியிட்டேன்.

 

இதில் என்ன கொடுமை என்றால் இப்போதும் நான் ஒரு போராளியாக பார்க்கின்ற வேல்முருகன் தமிழினத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கின்ற வேல்முருகன் இந்த தமிழின வீழ்ச்சிக்கு காரணமான திராவிடக் கருத்தியல் பற்றியும் தெலுங்கர் ஆதிக்கம் பற்றியும் நான் தொடர்ந்து எழுதி வருவதை படித்தும் பேசி வருவதை கேட்டும் அதை ஒரு உப்புக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

 

என்னைப் போல பலர் பேசுவது எழுவது பற்றி துளியும் சட்டை செய்யாமல் இன்று தெலுங்கர் முன்னேற்றக் கழகத்திற்கு அவர் தன் ஆதரவை தெரிவித்துள்ளார் அந்த தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கொலைகார காங்கிரசுடன் கூட்டணி கொண்டுள்ளது இதிலிருந்து நாம் வேல்முருகனை பற்றி என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர் நிகழ்கால அரசியலில் வெற்றி பெறும் வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி தன் மனம் போன போக்கில் சிலரை ஆவேசமாக பேசுவதும் சில கொடுமை காரர்களிடம் மிகவும் பவ்வியமாக போதும் என குழப்ப நிலையில் இருக்கிறார்
தமிழகத்தில் நிலவும் சிக்கல்களுக்கு என்ன காரணம் என்று புரியாதவராகவும் தமிழகம் வேறு கெஜ்ரிவால் வெற்றி பெற்ற டெல்லி வேறு என அறியாதவராகவும் அரசியலில் மக்கள் செல்வாக்கைப் பெற தொடர்ந்து கொள்கையோடு நின்று போராட வேண்டும் என்பதில் தெளிவு இல்லாதவராகவும் இருக்கிறார்.

 

சற்றே ஒரு வாரத்திற்கு முன் ஒரு பேட்டி கொடுத்தார்.

 

சிரித்துக்கொண்டே மகிழ்வாக பேட்டியளிப்பவர்களுடன் கூட்டணி வைப்பேன் என்று.

 

அதுபோல தினகரனுடன் கூட்டணி சேர்வதற்கு பேசியுள்ளார் எனக்குத் தெரிந்து அதிக இடங்களை கேட்டதாக தெரிகிறது அதற்கு தினகரன் ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒரு வெறுப்பான நிலைக்கு வந்துள்ளார்.

 

ஆக மொத்தம் மொத்தத்தில் தான் தோல்வியுற்றதாக கருதிக்கொண்டு திமுக என்ற தெலுங்கர் முன்னேற்றக் கழக ஆலமரத்தை இன்னும் பெரிய ஆலமரமாக வளர் துணை நின்று நம் காலத்தை முடிப்போம் என முடிவெடுத்து சென்று விட்டார்.

 

தமிழக அரசியலில் வேல்முருகன் ஒரு போராளி குழப்பவாதி. பாவம் அவரை நம்பி அவருடன் சென்றவர்கள் நிலையை நினைக்கும் போது தான் வருந்த வேண்டி உள்ளது.

 

தமிழகத்திலுள்ள திராவிட தெலுங்கு ஆதிக்க அரசியலை ஒழிக்க போராடுபவர்கள் மட்டுமே போராளிகள் மற்றவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்.

 

திமுகவின் வீழ்ச்சியே தமிழினத்தின் எழுச்சி இதை உணராது திமுகவுக்கு ஆதரவு கரம் நீட்டிய வேல்முருகனின் முடிவு அரசியல் தற்கொலை முடிவு.

 

வருந்துகிறேன் தோழர் வேல்முருகனை நினைத்து.