கடந்த வாரம் தமிழ் நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று திங்கட்கிழமை (27.10.14) மாலை 4:30 இலிருந்து 6:30 வரை லண்டன் Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் பிரித்தானிய வாழ் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டவர்களால் “Free students now”, “India respect freedom of speech”, “We support Tamilnaadu students” ஆகிய கொட்டொலிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எழுப்பினர்.

tamilstudents_uk_3
தமிழ்த் தேசிய உணர்வோடு தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்ற தமிழக மாணவர்களாகிய தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப் ஆகிய மூவர் மீதும் பல்வேறு குற்றங்கள் புனையப்பட்டு, தமிழகக் காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

tamilstudents_uk_5
மாணவர்களின் பேச்சுரிமையை மறுத்தும் அவர்களின் உரிமைகளை மதிக்காமலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கைது நடவடிக்கையைக் கண்டித்து நடத்தப்பட்ட இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்தியத் தூதரகத்தில் மனுவும் கையளிக்கப்பட்டது.