வைகோ தலைமையில் சென்னையில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது

chennai-0
வைகோ தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் சென்னையில் இடம்பெற்றுள்ளனர். தமிழகக் காவல்துறையினரின் பல்வேறு தடைகள், அழுத்தங்கள் மத்தியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பெருந்திரளான மக்களுடன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
chennai09
————————————-

முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

muttum9
இன்று முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது மாவீரர் நாள் நிகழ்வு . இவ் நிகழ்விற்கு உலத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் மாவீரர்கள் குடுபங்களும் தமிழ் உணர்வாளர்களும் சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

muttum7
———————————————

சிதம்பரத்தில் தடையை மீறி மாணவர்களால் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு

sithamparam
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று தடையை மீறி மாணவர்களால் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு

————————————————-

தமிழர் முன்னேற்ற படை இயக்கம் சார்பில் நடை பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

veera
இன்று தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மிக சிறப்பாக எழுச்சியுடன் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தமிழர் முன்னேற்ற படை இயக்கம் சார்பிலும் மாவீரர் நாள் நிகழ்வு நடை பெற்றது.

————————————————–

பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினரால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது

bala1
தாயக விடுதலைக்காக உயிர் நீத்த தமிழீழ விடுதலைப்போராளிகளின் நினைவாக இன்று (27/11/2014) மாலை சென்னை மயிலை பகுதியில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. மயிலை விசாலாட்சி தோட்ட பகுதி மக்களோடு இணைந்து இது நடத்தப்பட்டது.

பகுதியில் உள்ள குழந்தைகள் மாவீரர் நினைவு தீபத்தை ஏற்றி வைக்க, நிகழ்வு தொடங்கியது. நிகழ்வில் மாணவர்களும், விசாலாட்சி தோட்ட பகுதி மக்களும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

————————————————-

சென்னை முகப்பேரில் உள்ள தமுக அலுவலகத்தில் தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரும் மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

ஏன் மாவீரர் நாளை நாம் அனுசரிகின்றோம் என்பதை திரு. அதியமான் அவர்கள் எடுத்துக் கூறினார். தேசியத் தலைவர் 2008 ஆம் ஆண்டு உலகிற்கு கடைசியாக வழங்கிய மாவீரர் நாள் உரையின் சில பகுதிகளை இராஜ்குமார் பழனிசாமி வந்திருந்த உணர்வாளர்களுக்கு வாசித்துக் காட்டினார். அதன் பின்னர் மாவீரர் நாள் பாடல் ஒலிக்கப்பட்டு மாவீரர் நாள் உறுதி ஏற்பும் நடைபெற்றது. உணர்வாளர்கள் அனைவரும் தீபச் சுடர் ஏந்தி மௌன அஞ்சலியும் வீர வணக்கத்தையும் செலுத்தினர்.

ஏன் இவர்கள் மாவீரர்கள் ?
தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள்.
தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள்.
உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறைபோட்டவர்கள்
தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.
பள்ளிப் பிராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்.
ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.
எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்
தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்!
தேச விடுதலைக்காய் மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று.
இவ்வெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

———————————————————–

எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நவம்பர் 27- மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டம் பாண்டிச்சேரியில் ஒருங்கிணைக்கப்பட்டது.

vck-2014
புதுச்சேரி மாநில செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு வரவேற்புரையாற்ற, இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளர் பொதினிவளவன் முன்னிலை வகித்தார். தோழர்கள் அரசு வணங்காமுடி, அமுதவன் உரையாற்றினர். நிறைவாக பொதுச் செயலாளர் ரவிக்குமார் மாவீரர் நினைவு உரையாற்றினார். முன்னதாக ஈகச்சுடரை தோழர் வன்னிஅரசு ஏற்ற சிறுத்தைகள் அனைவரும் அகவணக்கம் செலுத்தினர்.

————————————————————-

விடுதலைத் தீபம் அணையாது.
kindy
மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினரால் இன்று கிண்டியில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி மாவீரர் தினத்தை கடைப்பிடித்து மாவீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தினர்.