தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

0
690

TN-flood-09தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்களை நடார்த்தி அதன் மூலம் இலவச மருத்துவ சிகிர்ச்சை மற்றும் இலவச மருந்துப்பொருட்களை அமெரிக்காவில் உள்ள கிளங்டனுக்கான தமிழர் அமைப்பு மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புஆகியன அமைப்புக்கள் இணைந்து வழங்கியுள்ளது.

 

14.12.2015 அன்று தொடங்கி சென்னை மற்றும் கடலூரின் பலபகுதிகளில் இதற்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பாக சென்னையின் கடற்கரைச்சாரைச் சாலை கோவளம் பகுதியிலும், இராயப்பேட்டை, புரசைவாக்கம், திரிசூலம் போன்ற பகுதிகளில் இவ் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்துப்பொருட்கள் ஆகியன வழங்கப்பட்டன.

 

இதற்கான ஏற்பாட்டினை எமது அமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் செய்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து வைத்தியர்கள் மற்றும் றோட்டறிக் கழக உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழுக்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். இவர்களுடன் தமிழகத்து வைத்தியர்களும் இணைந்து சேவையாற்றினார்கள். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகளும் வழங்கப்பட்டது.

 

இம் மருத்துவ முகாம் மூலம் சுமார் 3000 பேர்வரை பயனடைந்திருக்கின்றார்கள். அமெரிக்காவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் மற்றும் ஈழத்தமிழர்களின் இந்த சிறு முயற்சிக்கு தமிழக மக்களின் பெரும் வரவேற்பு பெற்றதுடன் செய்தி ஊடகங்களும் இதற்கு முக்கியம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தது. இம் மருத்துவ முகாம் மூலம் பயனடைந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியினையும், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் மற்றும் ஈழத்தமிழ் உறவுகளுக்கான தங்கள் நன்றியினையும் தெரிவித்திருந்தார்கள்.

 

ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பின் மூலம் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு உதவிகளை வழங்கிய ஈழத்தமிழ் உறவுகள், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள், மற்றும் சரியான ஏற்பாடுகளை செய்து கொடுத்த றோட்டறிக்கழக உறுப்பினர்கள், கிராமசபைத் தலைவர்கள் மற்றும் தோழ் கொடுத்த அனைவருக்கும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

 
எமது ஈழத்தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு எப்போதுமே தோழ் கொடுக்கும் எமது தாய்த்தமிழகத்திற்கு இன்னல் ஏற்பட்ட இவ்வேளை அதற்கு ஒரு சிறு உதவியை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பெருமைப்பட்டுக்கொள்ளுகின்றது.

 

 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு: www.Tamilsforclintons.com or http://tamilsforobama.com/gallary/2015/chennai-flood-news.html