சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் ஏற்பாட்டில் மருத்துவர் குழுவொன்று சென்னை வரவுள்ளது.

 

அந்த குழுவினருடன் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள மருத்துவர்கள் மற்றும் வேறு வழிகளில் உதவிசெய்ய விரும்புபவர்களும் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொள்ளவும்.

 

தொடர்புகளுக்கு: 078 284 5000, 0714 220002

 

தகவல் : திரு சி.அனுராஜ்

 

உதவ வாருங்கள் என வேண்டி நிற்கின்றது கனடிய தமிழர் தேசிய அவை

 

தமிழகத்தில் இயற்கை அனர்த்தத்தில் சிக்குண்டு வெள்ளத்தில் மூழ்குண்டு தவிக்கும் அன்னை தமிழக உறவுகளுக்கும் இந்த வெள்ளத்தில் உயிர் இழந்த தமிழ் உறவுகளுக்கும் கனடியத் தமிழ் மக்களின் குரலாக தேசியக் கட்டமைப்பாக செயல்பட்டு வரும் கனடியத் தமிழர் தேசிய அவை கனடா வாழ் தமிழ் மக்களோடு இணைந்து ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.

 

TN-flood-09இயற்கையின் இந்த பேரிடரில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்வு வாழ தாய் தமிழக உறவுகளுக்கு உலக தமிழ் உறவுகளும் கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு கனடா வாழ் தமிழ் மக்களின் ஆதரவோடு நிதி சேகரிப்பு நிகழ்த்தி தமிழக அரசின் ஊடாக தமிழக உறவுகளுக்கு நிதி பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளது கனடிய தமிழர் தேசிய அவை.

 

ஈழத்தில் மக்கள் துயருற்ற போதெல்லாம் தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பதற்கிணங்க ஓடோடி வந்து எமக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியதோடு ஈகியர்கள் வடிவில் உயிரும் அள்ளி கொடுத்த எம் தமிழ் உறவுகள் இன்று துயர் உற்று இருக்கையில் அவர்கள் அவலம் போக்கும் பணியில் உலகத் தமிழர்கள் நாமும் பங்கேற்பது எம் காலக் கடனாகும் .

 

இன்றளவும் ஈழத்தில் எம் மக்களுக்கு நடந்த சொல்லொணா கொடிய இனப்படுகொலைகளின் போதெல்லாம் உலகில் எமக்காக குரல் கொடுக்க ஒரு தேசம் இல்லை என நாம் அழுதாலும் எமக்காக எம் தமிழ் உறவுகள் தமிழகத்தில் உள்ளார்கள் என்றே எம் கண்ணீர் துடைத்து தோள் கொடுத்தவர்கள் எம் தாய் தமிழக உறவுகள். இன்று அவர்களுக்கு ஒரு இன்னல் என்றால் நாம் பார்த்திருக்க முடியுமா?

 

உறவுகளே எம் அன்னை தமிழக உறவுகளின் கண்ணீர் துடைக்கும் காலப்பணியில் கனடியத் தமிழர் தேசிய அவையினருடன் இணைந்து கொள்ளுங்கள்.

 

தமிழக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் வெள்ள அவலங்களின் துயர் தீர்க்க சிறு துளி பெரு வெள்ளம் என உதவ வாருங்கள் என வேண்டி நிற்கின்றது கனடிய தமிழர் தேசிய அவை.

 

 

வெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! பிரித்தானிய தமிழர் பேரவை

 

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது….

 

எதிர்பாராத இயற்கை அனர்த்தத்திற்குள்ளாகி தம் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அல்லலுரும் எம் தமிழக சொந்தங்களுக்கு உதவ வேண்டிய தார்மீக கடமை எமக்குள்ளது. ஈழத்தில் எம்மினம் இனவாதத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எமக்கெதிராக நடக்கும் அநீதிகளை கண்டு பொங்கியெழுந்து போராட்டம் செய்து தம் உயிர்களைக்கூட ஆகுதியாக்கிய தொப்புள் கொடி உறவுகள் இன்று துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள், அன்றுதொட்டு இன்று வரை எம்மோடு தோளோடு தோள் கொடுத்து போராடிவரும் அவர்களுக்கு ஒரு துயர் எனில் நாம் தானே உதவவேண்டும்.

 

எனவே நாடுகள் கடந்தும், எல்லைகள் கடந்தும், இனங்கள் கடந்தும் மனிதநேயத்தோடு எம் மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம். தமிழகத்திலும், ஈழத்திலும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவும் செயற்திட்டமொன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்துள்ளது. பிரித்தானிய வாழ் மக்களும், புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் எம் சொந்தங்களும் இப் புனித பணிக்கு தம்மாலான உதவிகளை செய்து எம் மக்களின் துயர் துடைக்க ஒன்றிணையுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

அத்துடன் பொதுஅமைப்புக்கள், ஆலயங்கள், தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவையும் தங்களின் மேலான பங்களிப்பை வழங்கி எம் இனத்தின் துயர் போக்கிட கரம் சேர்க்குமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கிறது. பிரித்தானியாவிலுள்ள அனைத்து பொது அமைப்புகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மனிதாபிமானத் தொண்டு நடவடிக்கையில் ஒன்றிணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

 

சேகரிக்கப்படும் நிதி உதவிகள் வெளிப்படைத் தன்மையுடன் கையாளப்படுவதுடன் தமிழக அரசினூடாக தமிழக மக்களுக்குக் கையளிக்கப்படும். நிதி உள்ளவர்கள் நிதி வழங்கலாம், சரீர உதவி வழங்க விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டு தொண்டாற்றலாம்.

 

மேலதிக விபரங்கள் விரைவில் ஊடகங்கள் வாயிலாக அறியத் தரப்படும்.

 

தொடர்புகளுக்கு: 02088080465, 07753351773, 07956919511, 07814486074, 07404493745

 

Bank details: Santander Bank
Account name: Tamilsforum UK Ltd
Sort code: 09 01 28
Account number: 20000469

 

Paypal details: https:https://www.paypal.com/cgi-bin/webscr…

 

நன்றே செய்வோம்! அதை இன்றே செய்வோம்!

 

பிரித்தானிய தமிழர் பேரவை


media@tamilsforum.com