தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

0
677

tn-fishஇலங்கையில் கைது செய்து தடுத்து வைக்கப்படடுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு.வலியுறுத்தி, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த திங்கட் கிழமை முதல் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அதிகாரிகள் யாரும் அவர்களின் போராட்டத்தை கண்டுக் கொள்ளாத நிலையில், தற்போது அவர்கள் தங்களின் போராட்டத்தை உண்ணாவிரதம போராட்டமாக மாற்றியுள்ளனர்.

காரைக்கால் மற்றும் புதுகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை கடற்படையினர் அண்மையில் கைது செய்திருந்தனர்.

அவர்களுடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் அதிகமான மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே இலங்கை பாதுகாப்பு தரப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து இந்தியாவின் லோக்சபாவில் விவாதிக்க கூடாது என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்றை இந்திய பாராளுமன்றத்தின் செயலகத்துக்கு பாதுகாப்புஅமைச்சர் ஏ.கே.அந்தோனி அனுப்பி வைத்திருப்பதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கடற்படையினருக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்க இந்தியா இணங்கி இருந்த நிலையில், அது குறித்து லோக்சபாவில் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை லோக்சபாபின் செயலகத்தில் முன்வைத்திருந்தனர்.

ஆனால் இந்த கோரிக்கையை ரத்து செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இலங்கைக்கான பயிற்சி அளிப்பு என்பது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற பாதுகாப்பு உடன்படிக்கையின் கீழ் வழங்கப்படுகின்ற ஒன்றாகும்.

இது தொடர்பில் லோக்சபாவில் விவாதிப்பதால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த விவாதத்தை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.