jeya-5திடீர் சுகவீனம் காரணமாக கடந்த செப்பரம்பர் மாதம் 22 ஆம் நாள் தழிழகத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று (05) காலமானதாக உத்தியயோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
எனினும் தமிழகத்தில் ஏற்படவுள்ள கொந்தளிப்பான நிலமையை கருத்தில் கொண்டு தழிக அரசும், இந்திய மத்திய அரசும் இந்த தகவலை வெளியிடுவதற்கு காலதாமதம் செய்துவருகின்றன. தமிழகத்தில் மேலதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 
முதல்வரின் இல்லம் அமைந்துள்ள போயாஸ் கார்டன் பகுதியில் தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள காவல்துறையினர் தமக்கான அடுத்த உத்தரவுக்கு காத்திருப்பதாக தெரிவிக்ப்படுகின்து.

 
தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டபோதும், பாதுகாப்பு நிலவரம் கருதி இந்திய மத்திய அரசு அதனை காலதாமதம் செய்து வருகின்றது. எனினும் இன்று நள்ளிரவு அதனை உறுதிப்படுத்த இந்திய நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 
தமிழக முதல்வருக்கு ஈழம்ஈநியூஸ் தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.