praba

நீங்கள் என்ன பதவியில் இருந்தாலும் அடிப்படையில் உணர்வுள்ள தமிழர்களாகவே இருப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றேன்.

 

தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஊழல் எல்லாவற்றையும் கூட நீதி துறையும் காவல் துறையும் பொறுத்துப் போகும் ஆனா இன உணர்வோடு தமிழர்கள் போராடினால் குரல் கொடுத்தால், பாடல் பாடினால் படம் எடுத்தால் கருத்து சொன்னால் எழுதினால் என உணர்வு கொண்ட அனைத்து தமிழர்களையும் சிறைப்படித்து வழக்குகள் சோடித்து தேசியப்பாதுகாப்பு சட்டம் பாய்ச்சி கொடுமைப்படுத்தி வருகிறது தமிழக இந்திய அரசுகள்.

 

தம்பி பிரபாகரன் மீதும் சட்டமும் காவல் துறையும் தன் ஆதிக்க வெறியை காட்ட முயலும்.

 

ஆனால் அரசை கடந்து இன உணர்வுள்ள தமிழர்களாக இந்த உணர்வு மிக்க தமிழன் இனம் அழிந்த வலி கொண்ட உணர்வு மிகுதியால் காட்டிய எதிர்ப்புக்கு உங்கள் வலுவான குரல் ஒலிக்க வேண்டும். இந்த இளையவனை இந்தியம் நசுக்காமல் காக்க வேண்டும் என வேண்டுகின்றேன்.

 

தமிழகத்தில் ஊழல் பேர்வழிகள் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால் தமிழினத்துக்காக குரல் கொடுத்தவர்கள் சிறைகளுக்குள்
நீதி துறை தமிழின விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் நிலையில் இருந்து தமிழர்களை காக்கும் பணி நீதி வழுவாத தமிழர்களான உங்களிடம் இன்னமும் இருக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.

 

தமிழக காவல் துறையில் இருக்கும் தமிழர்களிடமும் இதே இன உணர்வோடு செயல்படுங்கள் என தாழ்மையோடு வேண்டுகின்றேன்.

 

தம்பி பிரபாகரனையும் இவர் போல் இந்தியத்திடம் சிக்கி சிறைப்படுத்தபட்டுள்ள தமிழர்களையும் காக்க ஒட்டு மொத்த தமிழினமாக குரல் கொடுக்க அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும்.

 

உண்மையின் முன் நடுநிலைமை என ஒன்று இல்லை. உண்மை உணர்வுகளின் முன்பும் தவறுகள் கூட சரியாகும் என்பதை மனிதம் கொண்ட இனமாக புரிந்து நீதி வழங்க வேண்டும்! காவல் துறையும் அநீதியாக செயல்ப்பட கூடாது என வேண்டுகின்றேன்.

செந்தமிழினி பிரபாகரன்