நேரடி இன அழிப்புக்குள்ளான ஒரு இனக் குழுமம் தொடர்ந்து இன அழிப்பு அரசின் ஆளுகைக்குள் இருக்கும்போது அந்த இனக் குழுமத்திடமிருந்து ஐந்து வகையான அரசியல் உற்பத்தியாகும் என்கிறது ‘நந்திக்கடல்’.

அழிவு அரசியல், அவல அரசியல், அடிபணிவு அரசியல், ஒப்படைவு அரசியல், சரணாகதி அரசியல் என்பவையே அவையாகும். இதன் விளைவாக “இணக்க அரசியல்’ என்ற போக்கு அதி தீவிரமாக மேலெழும் என்கிறது “நந்திக்கடல்”. சம காலத்தில் மறுவளமாக இன அழிப்பு அரசு, தொடர்ந்து இன அழிப்பைத் தீவிரப் படுத்த இரு வேறு வகையான அரசியலைக் கையிலெடுக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.

மேற்படி இனக் குழுமத்தின் இதுவரை கால அடையாளத்தையும், இருப்பையும், அரசியலையும் நிர்மூலம் செய்யும் நீக்க அரசியல், மற்றும் நினைவு அழிப்பு அரசியல் என்பவையே அவையாகும்.

தமக்குள்ளிருந்து உற்பத்தியாகும் மேற்படி தளம்பல் அரசியலையும், எதிரிகளால் உட் செருகப்படும் நுணுக்க அரசியலையும் இரு துருவமாக எதிர் கொள்ளும் ஒரு இனக் குழுமம் அதை முறியடித்து ஒரு ‘ எதிர்ப்பு’ அரசியல் வடிவத்தை கட்டியெழுப்பத் தவறினால் அந்த இனம் முற்றாக அழிந்து போவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எச்சரிக்கிறது ‘ நந்திக்கடல்’.

தமிழரசுக் கட்சி கடந்த பதினொரு வருடங்களாக இந்த ‘அரசியலின்’ அப்பட்டமான பிரதிபலிப்பாகவே செயற்பட்டது. இப்போது சொல்லுங்கள்.. அதை இனியும் தொடர விடலாமா?

பரணி கிருஸ்ணரஜனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here