நல்லாட்சி என்று நாடகம் போட்டுதிரியும் கொழும்பு அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றுவதற்கே இப்படியான பொங்கல்விழா என்று நடார்த்தி, இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லிணக்கம் தொடர்ந்தும்செல்கின்றது என்று ஐ.நா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு காட்டி, இலங்கை மீது சர்வதேச ஈடுபாட்டினைஇல்லாமல் செய்வதற்கு போடும் நாடகம் இது.

 

இந்த நாடகத்தின் கதாபாத்திரத்தில் சந்திரிக்காவும் யாழ்ப்பாணம் வந்து இராமநாதன் பாடசாலையில் பேசஇருப்பதாக கூறப்படுகின்றது.

 

சிங்கள தேசம் தருவது எல்லாம் தமிழர்களிடம் இருந்து ஏற்கனவே பறித்தவைகளே ஆகும். அதில் 10 வீதம் கூடதிருப்பித்தரவில்லை. நல்லாட்சி என்று கூறி எமது பிரதிநிதிகள் எம்மை ஏமாற்றுகின்றார்கள்.

 

அரசியல் கைதிகளுக்கு விடுதலை இதுவரை கிடைக்கவில்லை.

 

UNHRC இன் படி பயங்கரவாதத் தடைச்சட்டம்நீக்கப்பட்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களின் காணிகளை எல்லாம் திருப்பிதரவேண்டும். இராணுவத்தை வடகிழக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வைதரவேண்டும். இனப்படுகொலை செய்யப்பட்ட 200000 தமிழ் மக்களின் கொலைக்கு நீதியை தரவேண்டும். இதன்பின்னரே நல்லாட்சி என்பது பொருத்தமானதாகும்.

 

எனவே அன்பான தமிழ்மக்களே! அவர்களின் பிரதிநிதிகளே! யாவரும் இந்த சிங்கள அரசாங்கம் செய்யும் பொங்கல்விழாவை பகிஷ;கரிக்க வேண்டும்!!

 

நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், எமது எமது மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை சொல்வதன் மூலம் நிச்சயமாக ஐக்கிய நாடுகள் எமக்கு, வேறு பல நாடுகளில் நடந்தது போல் தமிழர்களுக்கு ஒருவிருப்பமான அரசியல் தீர்வையும், தமிழர்களின் படுகொலைக்கான நீதியையும் பெற்றுத்தருவார்கள்.

 

இதனைத்தான் அரசியல் கைதிகளின் பெற்றோர்களும், இந்துமா மன்றத்தினரும் எம்மைக் கேட்கின்றனர்.

 

நன்றி

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு