தமிழர்கள் நாங்கள் எதிர்த்து அடிப்போம்’என்பது துவங்கி இருக்கிறது

0
618

அற்புதமான நிகழ்வுகளை மாணவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள்… நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பி இருக்கிறது…

’தமிழர்கள் நாங்கள் எதிர்த்து அடிப்போம்’என்பது துவங்கி இருக்கிறது.

tn-student-usa2
உலகின் ஆகப்பெரும் வல்லரசு என்று மார்தட்டிய அமெரிக்காவின் தூதரகத்திற்கு சென்று 48 ம்ணி நேரத்தில் தீர்மானத்தினை மாற்றி தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டு வரவேண்டும் இல்லையெனில் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தினை ஆரம்பிப்போம் என்றார்கள் மாணவர்கள்.

48 மணி நேரம் முடிந்த உடன் இன்று தமது போராட்டங்களை துவக்கி இருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு எதிரான பொருளதார புறக்கணிப்பு போர் துவங்கி இருக்கிறது..

2002இல் இருந்து 2009 வரை திட்டமிட்டு போரை கொடூரமன முறையில் வழிநடத்தி தமிழினப்படுகொலை செய்து முடிக்க உதவிய அமெரிக்கவிற்கு ’புரியும்’ மொழியில் தமிழ் மாணவர்கள் பேசி இருக்கிறார்கள்.. “தமிழினம்” என்கிற ஒன்று இலங்கையில் இல்லை, அங்கே “இந்துக்கள், இசுலமியர், கிருத்துவர்கள் ஆகியோர்மீது தான் மனித உரிமை மீறல் நடந்தது “ என்று திமிராக தீர்மானம் கொண்டு வந்து நம் உரிமையை நசுக்க முயன்ற அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்..

அமெரிக்காவிடம் பேசி நம் வழிக்கு கொண்டுவந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என்று முயற்சி எடுத்தவர்களின் முகத்தில் கரியை பூசிய அமெரிக்காவிற்கு, “தமிழ்ச் சமூகத்தின் சந்தை வேண்டுமா?… அல்லது இலங்கை வேண்டுமா?” என்று ஒரு பேட்டை தாதாவிற்கு புரியும் மொழியில் பேசி இருக்கிறார்கள்..

”ஏகாதிபத்திய எதிர்ப்பு துவங்கி இருக்கிறது.” எமது தமிழர் கடலில் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்காக தமிழர்களை வேட்டையாடிய உலகின் வல்லரசுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கிறது தமிழ்ச் சமூகம்…

இன்று காலை “அம்பா ஸ்கை வாக்” என்கிற சென்னையின் பெரிய வணிக வளாகத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து போராட்டம் நிகழ்த்தி, பின் கே.எஃப்.சியை முற்றுகையிட்டு மூட வைத்திருக்கிறார்கள் Prabhakaran V Prabha PK மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன் மற்றும் அவர்களது தோழர்கள் (பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்க)… பின் கைதாகி மாலை விடுதலை ஆகி இருக்கிறார்கள்.

வாழ்த்துக்களை தெரிவிப்போம். செய்தியை பரப்புவோம்….

அவர்களது செய்தி குறிப்பு….

usa-tn1
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி ஸ்கை வாக்’ல் உள்ள KFC நிறுவனத்தை இன்று முற்றுகையிட்டோம்.

சுமார் ஒரு மணி நேரம் ஸ்கை வாக்கை கைபற்றி மாணவர்கள் அங்குள்ள மக்களிடம் ஈழப் பிரச்சனையை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் KFC கடைக்குள் சென்று அமெரிக்காவின் வெற்று தீர்மானத்திற்கு நம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமெரிக்க பொருட்களை புறக்கனிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினோம்.

கடைக்குள் இருந்த 50க்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் துரோகத்தையும் அமெரிக்க புறக்கணிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்த பின்பு கடையில் இருந்து அவர்கள் உணவு உண்பதை பாதியில் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியேறினர்.

இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடை நிர்வாகத்திடம் பணத்தை திரும்ப கேட்டு பெற்று சென்றனர்.

அறிவிக்கப்படாத திடீர் போராட்டம் என்பதால் காவல் துறையினர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது அதை நமக்கு சாதகமாக பிரச்சாரம் செய்ய பயன்படுத்தினோம்.

இன்று கடையில் சாப்பிட வந்தவர்களும் வணிக வளாகத்தில் போராட்டத்தை வேடிக்கை பார்த்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களும் அடுத்தமுறை அமெரிக்க பொருட்களை வாங்க நிச்சயம் தயங்குவார்கள்.

இது அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு ஒரு சரியான எதிர்ப்பாக சென்று சேரும் என நம்புகிறோம்.

திருமுருகன் காந்தி