சிறீலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கிவரும் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையின் கபடத்தனம் குறித்து தமிழகத்தை தளமாகக் கொண்ட மே 17 இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன்காந்தி வெளியிட்டுள்ள முகநூல் குறிப்பு வருமாறு:
isai-4
”ஓன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” , ”13வது சட்டதிருத்த அமல்” , ”அதிகார பகிர்வு” , ”நல்லிணக்கம்” என சம்பந்தன், மோடி முதல் லோக்கல் பத்திரிக்கை தலையங்கம் வரை பேசி தீர்க்கிறார்கள். எதோ சூப்பர்மேன் மோடி இந்தியாவிற்கு தலைவரானவுடன் இதையனைத்தையும் பெற்றுத்தரப்போவதாக புளகாங்கிதம் அடைகிறார்கள். ஒருமணி நேரம் ஒதுக்கு மோடி பேசினார், அக்கறையுடன்கேட்டார் என விவரணைகளின் உச்சம் தாங்கமுடியவில்லை.

மறுபுறம், ஈழ அகதிகள் என்கிற பெயரில் இலங்கையில் இருந்து புலிகள், இசுலாமிய பயங்கரவாதிகள் ஊடுறுவுகிறார்கள், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் நடக்கிறது என்று பிரச்சாரம் வேறு.

”இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை “ என்று பேசும் வாய்கள், தமிழகத்தில் ஈழ குடிமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிபற்றி பேசுவதில்லை. உன் அதிகாரம் இருக்கும் இடத்திலேயே ஏதும் செய்யதவன், ராஜபக்சே மாதிரியான நபரிடம் சென்று என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்.

இவர்கள் சொல்லுவதற்கு ராஜபக்சே என்ன சொல்கிறார்?.. ராஜபக்சேவும், சிங்கள பேரின வாத கும்பலும் எந்த அதிகார பகிர்வும் தமிழர்களுக்கு தர இயலாது என்று வெளிப்படையாக அறிவித்ததைப் பற்றி ஏன் எந்த பத்திரிக்கையும் மேற்சொன்ன நபர்களிடம் கேள்வி எழுப்பவில்லை. தமிழர்களை காப்பது என்பதை விட , ”தமிழர்விடயத்தில் மோடியை காப்பது” என்பதே பிரதான நோக்கமாக இருக்கிறது.

நீங்கள் என்ன நடித்தாலும், பூச்சாண்டி வேசம் போட்டாலும் உங்களது யோக்கியதையை சிங்களமே அம்பலப்படுத்தும். கடந்த காலத்திலும் “நாங்கள் சொல்வதை கேட்டு இலங்கை நடந்து கொள்ளும்,” என்று வீரவசனம் பேசியவர்களின் முகத்தில் சிங்களம் மிக நேர்த்தியாகவும், முழுமையாகவும் கரிபூசியது.

”தமிழீழமே எங்களுக்கான இறுதித் தீர்வு” என்றுதான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் தனது இறுதிக் குரலாக உலகிற்கு பதிவு செய்தது.
இசைப்பிரியாவினையும், பாலச்சந்திரனையும் மற்றும் எண்ணற்ற உயிர்களை மறந்து உங்கள் வலையில் விழ நாங்கள் முட்டாள்களும் இல்லை, துரோகிகளும் இல்லை.

தன் கைகள் கட்டப்பட்டு எதிரிகளிடத்தில் சிக்குண்டு மரணத்தினை எதிர்நோக்கி இருக்கும் இசைப்பிரியாவின் இந்த கணங்களை நினைத்துப் பார்ப்பவர் எவரும் இத்துரோகிகளை மன்னிப்பார்கள் என நினைக்கவில்லை.