இரா.சம்மந்தன் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியதும், முன்னாள் போராளி ரூபன் அவர்கள் வெற்றிபெற வேண்டியதும் இன்றைய காலத்தின் தேவை.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) ஆகிய நான் உங்களிடம் வேண்டிக் கேட்பது ஒன்றே ஒன்று தான்.

இந்த தேர்தல் ஒரு முக்கிய செய்தியை இந்த உலகிற்கு சொல்லப் போகிறது. இது வரை நாம் தெரிவு செய்து அனுப்பிய பிரதி நிதிகள் எம் இனத்தை விற்பவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாது தொடர்ந்து அவர்களை அனுப்புவதால், உலக நாடுகளைப் பொறுத்தவரை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு, எமக்கு நடந்த இனப் படுகொலையை பயங்கரவாத ஒழிப்பு என்று வாய் கூசாமல்
அறிக்கையிடும் அந்த உண்மையற்ற கூட்டம் தான் எமக்கான பிரதிநிதிகள் என எண்ணி ஏற்றுக் கொள்வதால் எமக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை மாற வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை. எமது முன்னாள் போராளிகள், மண்ணுக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள், ஏன் அழிக்கப்பட்டோம் எனத் தெரியாமலே, கொல்லப்பட்ட எம் மக்கள் இவர்களின் ஏக்கங்களை இந்த உலகம் உண்மையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அவர்களுக்காக அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து, அத்தனை துன்பங்களையும் அநுபவித்து, சிறையில் வாடி, இன்று இந்த மண்ணின் சீரழிந்த நிலை கண்டு வேதனையில் துடிக்கும் எம் போராளிகள் சார்பில் முதலும் முடிவுமாக இத்தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளேன்.

மக்கள் சேவைக்கு நான் புதியவனல்ல, தேர்தல் களத்திற்குத்தான் புதியவன். உங்களுக்கான எனது சேவையை புதிய களத்தில் தொடர உங்கள் பொன்னான வாக்குகளை சிதறடிக்காமல் மீன் சின்னத்திற்கு மட்டுமே அளியுங்கள். நீங்கள் தமிழர்கள் தான் என்பதைஉறுதி செய்யுங்கள். இது மட்டும் தான் உங்களுக்கான கடைசி சந்தர்ப்பம்.

மறக்காமல், மறுக்காமல், இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் அனைவரும் மீன் சின்னத்தை மட்டுமே ஆதரித்து உங்கள் இன உணர்வை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுங்கள்.

சுயநலம் இல்லாதவர்களின் உண்மையான மக்கள் சேவை எப்படி இருக்கும் என்பதை முதல் தடவையாக அனுபவித்துப் பாருங்கள்.

புதிய மாற்றத்திற்காக, நேர்மையான சுயநலமற்ற சேவைக்காக உங்கள் வாக்குகள் அனைத்தும் மீன் சின்னத்திற்கே.

நன்றி
என்றும் உங்கள் சேவைக்காக,
உங்கள் அபிமானத்துக்குரிய,
– ரூபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here