தமிழினப் படுகொலையும் ஐநாவின் அணுகு முறையும்..! – சென்னையில் கருத்தரங்கு.

0
707

chennai-2017-Janவரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின்; மனித உரிமைக் கூட்டத் தொடரை ‘தமிழர் தரப்பு எவ்வாறு கையாள்வது?’ என்பது குறித்து கவனப்படுத்தும் நோக்குடன் ‘அறிவாயுதம்’ குழுவினரால் மேற்படி கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

ஜனவரி 22 ம் நாள் சென்னை உமாபதி கலையரங்கத்தில் மாலை 3 மணிக்கு இக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

 

பிராந்திய பூகோள அரசியலுக்குள் சிக்கி இனஅழி;ப்பை சந்தித்த தமிழினம் தொடர்ந்து மேற்படி புவிசார் அரசியலுக்குள் சிக்கி தனக்கான நீதியை எட்டமுடியாதவாறு தொடர்ந்து எமாற்றப்பட்டு வருகிறது.

 

nermanuஒரு சடங்கு போல் ஐநா மனித உரிமைக் கூட்டத் தொடர் வருடாவருடம் கூட்டப்படுவது மட்டுமல்லஇ இனஅழிப்பு அரசை காக்கும் ஒரு செயற்திட்டமாகவம் ஐநா மனித உரிமை கூட்டத் தொடர் மாற்றப்பட்டுவருவது கண்கூடு.

 

இதை மாற்றியமைக்கும் ஒரு செயற்திட்டத்தை தமிழர் தரப்பு வகுத்துக் கொள்ளும் நோக்குடன் பல்துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை உள்வாங்கும் நோக்கில் இக் கருத்தரங்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது

 

குறிப்பாகஇ தமிழின அழிப்பு விவகாரத்தை ஐநா பொதுச் சபைக்கு ஒப்படைத்து அதன் மூலம் ஐநா பொதுச் சபை இவ் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு சொண்டு செல்ல வேண்டும்இ ஐநா பாதுகாப்பு சபை இதனை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமோ அல்லது பொருத்தமான அனைத்துலக நீதி விசாரணை சபையொன்றை உருவாக்குவதன் மூலமோ விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்ற சாதகமான கோரிக்கைகளை பரிசீலித்து கருத்துக்களை உள்வாங்கி இந்த வருட கூட்டத் தொடரை தமிழர் தரப்பு தமக்கு சாதகமாக்க வேண்டும் என்பதே இக் கருத்தரங்கின் மைய நோக்கமாகும்

 

சமகாலத்தில் தமிழீழம்இ புலம் மற்றும் தாய் தமிழகம் இணைந்து ஐநா வை நோக்கி மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடாத்த அரசியல் இயக்கங்களையும்இ அமைப்புக்களையும் நோக்கி இக் கருத்தரங்கு அறைகூவல் விடுக்கிறது.

 

அறிவாயுதம்; குழுவினரின் ஒழுங்கமைப்பில் உணர்ச்சிக் கவிஞர்; காசியானந்தன் தலைமையில் நடைபெறும் இக் கருத்தரங்கில் பல் துறைசார் வல்லுனர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளார்கள்

 


parani-32
குறிப்பாக புலத்திலிருந்து ஐநா விவகாரங்களை தொடர்ந்து அவதானித்து வரும்; ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நிர்மாணுசன் பாலசுந்தரம் மற்றும் போருக்கு பின்னானன பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இனஅழிப்பு குறித்த பின் கற்கை ஆய்வாளருமான பரணி கிருஸ்ணரஜனி ஆகியோர் சிறப்புரை வழங்குகிறார்கள்.

 

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.